ஆட்டோகிராப் போட்ட தனது சி.எஸ்.கே ஜெர்சியை பாகிஸ்தான் வீரருக்கு பரிசாக அளித்த தோனி – யாருக்கு தெரியுமா?

ms
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி எப்போதுமே திறமையுள்ள வீரர்களை ஆதரிக்கும் தன்மை உடையவர். அந்த வகையில் ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு தனது ஆலோசனைகளை வழங்கியது மட்டுமின்றி அவர்களுக்கான நினைவு பரிசையும் அளித்து கௌரவித்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே பல இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தனது ஜெர்சியினை வழங்கியுள்ளார்.

அந்தவகையில் மகேந்திர சிங் தோனி தற்போது பாகிஸ்தான் வீரர் ஒருவரின் திறமையை பார்த்து அவருக்கு தனது அன்பு பரிசாக சிஎஸ்கே அணிக்காக தான் பயன்படுத்திய ஜெர்சி ஒன்றினை தனது கையொப்பத்தோடு வழங்கியுள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் ஜெர்சியை பரிசாக அளித்த வீரர் யாரெனில் : பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ராஃப் தான். 28 வயதான ஹாரிஸ் ராஃப் 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி 8 ஒருநாள் போட்டிகளிலும், 34 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ச்சியாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் அவர் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

அவருக்குத்தான் தோனி தனது ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து : லெஜெண்ட் மற்றும் கேப்டன் கூல் எனக்கு கொடுத்த மிக அற்புதமான கிப்ட் இது. 7 ஆம் எண் எப்பொழுதுமே இதயங்களை வெல்லும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்று தோனி கொடுத்த அந்த ஜெர்சி புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் நான் இந்த அணிக்காகத்தான் விளையாட ஆசைப்படுகிறேன் – ஹர்ஷல் படேல்

இந்த புகைப்படம் ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றதால் அந்த சமயத்தில் இந்த பரிசு வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement