1887 முதல் 2023 வரை.. 145 வருட வரலாற்றில் முதல் முறையாக இலங்கை – பாக் போட்டியில் அரங்கேறிய வினோதமான நிகழ்வு

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் இந்தியாவுடன் மோதுவதற்கு தகுதி பெற்றது. கொழும்பு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 252/8 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 83* ரன்கள், அப்துல்லா ஷபிக் 52 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 253 ரன்களை துரத்திய இலங்கைக்கு துவக்க வீரர்கள் நிஷாங்கா 29, குசால் பெரேரா 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் குஷால் மெண்டிஸ் 91 (87) ரன்களும் சமரவிக்ரமா 48 ரம்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் கேப்டன் சனாகா 2 வெல்லாலகே 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

வினோத நிகழ்வு:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய அசலங்கா கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது 4, 2 ரன்கள் விளாசி மொத்தம் 49* (47) ரன்கள் அடித்து கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக இப்திகார் அகமது 3, சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் விளையாடிக் கொண்டிருந்த இப்போது 2 முறை வந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக மழை வருவதற்கு முன்பாக 28வது ஓவரில் பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் 12 ரன்களில் அவுட்டானது போட்டியின் தலையெழுத்தை மாற்றியது என்றே சொல்லலாம். ஏனெனில் மழை நின்ற பின் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் முகமது ரிஸ்வான் அதிரடியில் பாகிஸ்தான் 252/7 என்ற நல்லறங்களை எடுத்தது. அதைத்தொடர்ந்து டிஎல்எஸ் விதிமுறைப்படி புதிய இலக்கு நிர்ணயிக்கும் போது முகமது நவாஸ் முக்கிய நேரத்தில் அவுட்டானதால் எக்ஸ்ட்ரா ரன்களை இலக்காக பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் நழுவ விட்டது.

- Advertisement -

இதையும் படிங்க: இப்படி விளையாடுனா நெதர்லாந்தை கூட தோக்கடிக்க முடியாது. கொஞ்சம் பாத்து ஆடுங்க – எச்சரித்த கம்ரான் அக்மல்

அதாவது விதிமுறைப்படி இலங்கைக்கும் 42 ஓவர்களில் 1 ரன்கள் கூட எக்ஸ்ட்ரா இல்லாமல் மிகச்சரியாக 252 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை வெறித்தனமாக போராடி இலங்கையின் மிகச் சரியாக 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்து எட்டிப் பிடித்து வென்றது. அந்த வகையில் 145 வருட சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் இரு அணிகளும் சரிக்கு சமமாக ஒரே ரன்களை எடுத்தும் அதில் ஒரு அணி மட்டும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

குறிப்பாக கடந்த 1887 முதல் 2023இல் நேற்று முன்தினம் வரை இதற்கு முன் இப்படி ஸ்கோர் சமனில் முடிந்த எத்தனையோ போட்டிகள் டை என்று தான் அறிவிக்கப்பட்டது. அல்லது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பொதுவாகவே ரசிகர்களுக்கு எளிதில் புரியாத டிஎல்எஸ் விதிமுறை வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு வினோதத்தை அரங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement