ஐபிஎல் ஏலத்தில் இந்தவொரு விஷயத்துக்கு ஒரு லிமிட் வைக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் கோரிக்கை

Gavaskar
Advertisement

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக ஐபிஎல் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் வீரர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் இம்முறை 10 அணிகள் விளையாட உள்ளதால் அந்த அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக மெகா ஏலம் நடைபெற உள்ளது.

ipl

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்கும் இந்த மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ளது. ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக இந்த மெகா ஏலத்தை ரசிகர்கள் நேரிடையாகக் கண்டு களிக்கலாம்.

- Advertisement -

கோடிகள் புரளும் ஏலம்:
பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தில் தரமான வீரர்களை சற்றும் யோசனை செய்யாமல் பல கோடி ரூபாய்களை செலவு செய்து வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடுவது வழக்கமான ஒன்றாகும். அதிலும் தரமான வெளிநாட்டு வீரர் என்றால் அவர்களுக்கு சம்பளமாக கோடிகளை கொட்டிக் கொடுக்க அனைத்து ஐபிஎல் அணிகளும் எப்போதுமே அஞ்சியதில்லை.

Rahul kl

அந்த வகையில் கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடிகளுக்கு ராஜஸ்தான் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த வருடம் ஒரு படி மேலே சென்ற புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ அணி நிர்வாகம் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுலை 17 கோடிக்கு ஒப்பந்தம் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -

அண்டர் 19 வீரர்கள்:
அந்த வரிசையில் இந்த வருடம் டேவிட் வார்னர், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் மேற்கத்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கேப்டன் யாஷ் துள், ராஜ் பாவா போன்ற வீரர்கள் பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போவார்கள் என கருதப்படுகிறது.

IND- u19

இந்நிலையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்குபெறும் அண்டர் 19 வீரர்களின் சம்பளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “இந்த வாரம் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதில் நம் நாட்டை சேர்ந்த சில அண்டர்-19 வீரர்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என நினைக்கிறேன்.

- Advertisement -

இருப்பினும் அண்டர்-19 அளவில் சிறந்து விளங்கியவர்கள் ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்குவார்கள் எனக் கூறுவதற்கு எந்த கேரன்டியும் இல்லை. சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள் கூட இதில் சிறந்து விளங்கியதில்லை. ஏனெனில் ஐபிஎல் தொடரின் தரம் என்பது மிகப் பெரியதாகும்” என தெரிவித்துள்ளார்.

Sunil-gavaskar

கவனம் இழப்பார்கள்:
“சில வீரர்களுக்கு திடீரென அதிக பணம் கிடைப்பதால் கிரிக்கெட் மீது அவர்களின் கவனம் மாறிவிடுகிறது. எனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் என்ற அதிகபட்ச தொகையை சம்பளமாக நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் அவர்களும் அதிக பணத்திற்காக கடினமாக உழைக்க வேண்டும் என நினைப்பார்கள். ஏனென்றால் பணம் எளிதாக கிடைத்து விட்டால் சில திறமைகள் இளமையிலேயே காணாமல் போகிவிடும். இதற்கு முன் இது போன்ற எத்தனையோ வீரர்கள் பணத்தால் சிறப்பாக செயல்பட தவறி இறுதியில் காணாமல் போயுள்ளார்கள்.

- Advertisement -

எனவே இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சம்பள அளவை நிர்ணயித்து ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பசியை அவர்களிடையே ஐபிஎல் நிர்வாகத்தினர் ஏற்படுத்த வேண்டும்” என இதுபற்றி சுனில் கவாஸ்கர் மேலும் தெரிவித்துள்ளார். பொதுவாகவே ஒரு மனிதன் பல கோடி ரூபாய்களை திடீரென பார்த்தால் அவனுக்கு கைகால் ஓடாது என கூறுவார்கள். மேலும் பெரும்பாலானவர்கள் பெரிய அளவிலான பணத்தை கண்டதும் பழையதை மறந்து விட்டு சொகுசு வாழ்க்கையை வாழத் தொடங்கி விடுகிறார்கள். அந்த கூற்றுகளுக்கு கிரிக்கெட் வீரர்களும் விதிவிலக்கல்ல என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய நிர்வாகம் கழற்றிவிட முடிவு செய்துள்ள 4 சீனியர் வீரர்கள் – லிஸ்ட் இதோ

அதாவது அண்டர் 19 வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர் அப்போதுதான் ஒவ்வொரு வருடமும் நாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பெரிய இடத்தை அடைய முடியும் என்ற வெறி இளம் வீரர்களிடையே உண்டாகும் என்ற நியாயமான கோட்பாட்டை சுனில் கவாஸ்கர் முன் வைத்துள்ளார். தற்போது கூட ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2020 தொடரில் அசத்திய ரவி பிஸ்னோய் இதுவரை இந்தியாவிற்காக விளையாடாத போதிலும் லக்னோ அணிக்காக ரூபாய் 4 கோடி என்ற பெரிய தொகைக்கு விளையாட ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement