இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய நிர்வாகம் கழற்றிவிட முடிவு செய்துள்ள 4 சீனியர் வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 16ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது.

prasidh 1

- Advertisement -

வரும் பிப்ரவரி 20ஆம் தேதியுடன் வெஸ்ட்இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணம் முடிவுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து அண்டை நாடான இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.

புதிய கேப்டன் யார்:
இதில் முதலாவதாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. அதன்பின் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இந்த கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

kohli

இதில் முதலில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட உள்ளது. ஏனெனில் கடந்த 2014 முதல் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி திடீரென சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். அவருக்கு நிகரான கேப்டன் இந்திய அணியில் இல்லை என்றாலும் தற்போதைய நிலைமையை சமாளிக்க ஏற்கனவே வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள அனுபவ வீரர் ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டனாகவும் அறிவிக்கப்படுவார் என நம்பப்படுகிறது.

- Advertisement -

கழட்டிவிடப்படும் மூத்த வீரர்கள்:
மேலும் இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான 4 மூத்த வீரர்களை விடுவிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த பல வருடங்கள் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களாக வலம் வந்த அஜிங்கிய ரஹானே, சத்தீஸ்வர் புஜாரா, விரிதிமான் சஹா, இஷாந்த் சர்மா ஆகியோரை இலங்கை டெஸ்ட் தொடரில் கழட்டிவிட இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

pujara 1

ஏனெனில் தற்போது ரவி சாஸ்திரி – விராட் கோலி என்ற கூட்டணி போய் ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா என்ற புதிய கூட்டணி இந்திய தலைமை பொறுப்பில் அமர்ந்துள்ளது. மேலும் தேர்வு குழுவினரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த அனைவரும் புதிய இந்திய அணியை உருவாக்க எண்ணுவதாக தெரிகிறது. அதில் முதல் கட்டமாக மோசமாக செயல்படும் வீரர்களுக்கு பதில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குட் பை சொன்ன பிசிசிஐ:
அதற்கு ஏற்றார்போல் சமீப காலங்களாக மேற்கூறிய 4 வீரர்களும் கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்படாமல் மோசமான பார்மில் உள்ளார்கள். குறிப்பாக ரகானே மற்றும் ஆகியோர் கடந்த சில வருடங்களாகவே ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மல் திண்டாடி வருகிறார்கள். கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் புஜாரா 126 ரன்கள், ரகானே 136 ரன்கள் என குறைந்த அளவு ரன்களை மட்டுமே எடுத்ததால் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. எனவே ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் போன்ற பெஞ்சில் அமர்ந்திருக்கும் இளம் வீரர்களுக்கு சொந்த மண்ணில் நடைபெறும் இலங்கை தொடரில் வாய்ப்பளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

saha

அதேபோல் இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் ஏற்கனவே முத்திரை பதித்து விட்டார். ஒருவேளை அவருக்கு காயம் ஏற்பட்டால் கூட கேஎஸ் பரத் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என இந்திய நிர்வாகம் கருதுகிறது. எனவே ஒரு நல்ல விக்கெட் கீப்பராக இருக்கும் போதிலும் ரன்கள் குவிக்க தடுமாறும் ரிதிமான் சஹாவுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரைப் போலவே மற்றொரு அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக அவரின் இடத்தில் முகமது சிராஜ் முத்தரை பதிக்க துவங்கியுள்ளார். ஒருவேளை அவருக்கு காயம் அடைந்தால் கூட அவேஷ் கான், பிரசித் கிருஷ்னா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்து விட்டதாக தெரிகிறது. அதன் ஒரு அங்கமாகவே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்டிருந்த போதிலும் கடந்த மாதம் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட இசாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ishanth 2

மொத்தத்தில் இந்திய அணியின் இந்த நிலைப்பாடு பற்றி இந்த 4 வீரர்களிடமும் ஏற்கனவே இந்திய அணி நிர்வாகம் தெரிவித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் விரைவில் துவங்க உள்ள ரஞ்சி கோப்பையில் பங்கேற்கவில்லை. மறுபுறம் ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இலங்கை தொடரில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என தெரியவருகிறது.

Advertisement