IPL 2023 : வரும் ஐ.பி.எல் தொடரில் அவங்க 3 பேரு விக்கெட்டை எடுக்கனும். அதுவே என் இலக்கு – உம்ரான் மாலிக்

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வரும் 23 வயதான உம்ரான் மாலிக் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக வீரர் நடராஜனுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்றுவீராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி தெரிவு செய்யப்பட்ட அவர் முதல் தொடரின் முதல் போட்டியிலேயே 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அந்த தொடர் முழுவதுமே தனது அதிவேக பந்து வீச்சால் உலகில் உள்ள முன்னணி பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்.

இதுவரை 17 டி20 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளையும், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

தற்போது படிப்படியாக இந்திய அணியில் நிலையான இடத்தினை பிடித்து வரும் உம்ரான் மாலிக் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக முக்கிய பந்துவீச்சாளராக அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க இருக்கிறார்.

இந்நிலையில் உம்ரான் மாலிக் அந்த தொடருக்கு முன்பாக எந்தெந்த வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது குறித்த தனது வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரிலும் நான் சன்ரைசர்ஸ் அணிக்காக எனது முழு பங்களிப்பை வழங்க தயாராகி வருகிறேன். நிச்சயம் எதிர்வரும் ஐபிஎல் தொடர் எனக்கு ஒரு முக்கியமான தொடராக அமையும்.

- Advertisement -

எனவே என்னுடைய முழு திறனையும் நான் இந்த தொடரில் வெளிக்காட்ட இருக்கிறேன். அதோடு இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் 3 பேரையும் வீழ்த்துவதே எனது இலக்கு. இந்திய அணிக்காக இந்த மூவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் அவர்கள் ஜாம்பவான்களாக திகழ்கின்றனர்.

இதையும் மாலிக் : களத்திலும் களத்திற்கு வெளியேயும் மோசமாக அமைந்த 2022இல் – ரிஷப் பண்ட் சந்தித்த 5 முக்கிய தருணங்கள்

எனவே இம்முறை அவர்களுக்கு எதிராக நான் பந்துவீச ஆவலாக காத்திருக்கிறேன் என உம்ரான் மாலிக் கூறியுள்ளார். இந்த ஆண்டு அறிமுகமான உம்ரான் மாலிக் குறுகிய காலத்திலேயே அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கும் வேளையில் உலகின் அதிவேக பந்துவீச்சாளராக நிச்சயம் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துவார் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement