களத்திலும் களத்திற்கு வெளியேயும் மோசமாக அமைந்த 2022இல் – ரிஷப் பண்ட் சந்தித்த 5 முக்கிய தருணங்கள்

- Advertisement -

டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்திற்குள்ளானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டேராடூனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவர் புத்தாண்டுக்காக வீடு திரும்ப அதிகாலை 5.30 மணிக்கு தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் சற்று வேகமாக சென்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக லேசான தூக்க கலக்கத்தை சந்தித்ததால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் டிவைடரில் மோதி விபத்திற்குள்ளானது. இருப்பினும் அந்த வேதனையான நேரத்தில் சாதுரியமாக செயல்பட்டு அவர் வெளியே வந்த அடுத்த சில நிமிடங்களில் கார் நெருப்பு பற்றி எரிந்தது

அதை அந்த பகுதிகளிலிருந்து பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் அனைவரும் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர். புத்தாண்டு துவங்குவதற்கு ஒருநாள் இடைவெளியில் சந்தித்த மோசமான விபத்தை போலவே இந்த 2022ஆம் ஆண்டு ரிஷப் பண்ட்டுக்கு களத்திலும் களத்திற்கும் வெளியேயும் சுமாராகவே அமைந்தது. அதைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. அநீதிக்கு எதிரான குரல்: 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓபேத் மெக்காய் வீசிய கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட ரோவ்மன் போவல் வெற்றிக்கு போராடினார். ஆனால் அதில் 3வது பந்து இடுப்புக்கு மேலே வந்தது தெளிவாகத் தெரிந்தும் நடுவர் நோபால் கொடுக்காததால் கோபமடைந்த ரிசப் பண்ட் கேப்டனாக தமது அணியினரை மைதானத்திலிருந்து வெளியே வருமாறு அழைத்தது கடும் சர்ச்சை ஏற்படுத்தியது

அவரை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் அடக்கிய நிலையில் மற்றொரு பயிற்சியாளர் பர்வீன் ஆம்ரே களத்திற்கு சென்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதி வரை எந்த நீதியும் கிடைக்காத நிலையில் அடுத்த நாள் நடுவர்களை எதிர்த்துப் பேசியதற்காக அபராதத்தை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் நடுவர் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்ற விதிமுறையை மீறியதற்காக முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார்.

- Advertisement -

4. வெள்ளைப்பந்து சொதப்பல்: 2017இல் அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி தோனியை மிஞ்சிய சாதனைகளை படைத்து காபா போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட வேண்டிய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிகப்படியான வாய்ப்பு பெற்றும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் கூட 25 டி20 போட்டியில் வெறும் 364 ரன்களையும் 12 ஒருநாள் போட்டிகளில் 336 ரன்கள் எடுத்து சுமாராகவே செயல்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் 680 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இருப்பினும் தொடர்ந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்று வந்த அவரால் சஞ்சு சாம்சன் தொடர்ந்து வாய்ப்புகளை இழந்தார். அதனால் ரசிகர்களின் உச்சகட்ட வெறுப்பை சம்பாதித்த ரிசப் பண்ட் வாய்ப்பு பெறும் போதெல்லாம் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

3. திமிர் பேச்சு: அப்படி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டதைப் பற்றி கடந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே கேள்வி எழுப்பினார்.

அப்போது தமது வெள்ளை பந்து சாதனைகள் மோசமாக இல்லை என்றும் 24 வயது மட்டுமே நிரம்பிய தம்மை ஜாம்பவான்களுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் வேண்டுமானால் 30 – 32 வயதில் ஒப்பிடுங்கள் என்றும் அவர் திமிராக பேசியது அனைவருக்கும் பிடிக்கவில்லை.

- Advertisement -

2. ஓய்வா – நீக்கமா: அது பிசிசிஐயிலும் அதிருப்தியை ஏற்படுத்தியதால் ஒரு கட்டத்தில் துணை கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் அடுத்ததாக இலங்கைக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு பெறவில்லை. அதற்கு லேசான காயத்திலிருந்து குணமடைய ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

ஆனால் காயம் ஏற்பட்டிருந்தால் எப்படி வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடியிருப்பார் என்று ரசிகர்கள் கூறும் நிலையில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டதா அல்லது நீக்கப்பட்டாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.

இதையும் படிங்கவீடியோ : காரை மட்டும் பொறுமையா ஓட்டு, 3 வருடத்துக்கு முன்பே ரிஷப் பண்ட்டுக்கு அட்வைஸ் கொடுத்த ஷிகர் தவான்

1. துரத்தும் ஊர்வசி: இதற்கு மத்தியில் ரிஷப் பண்ட் தம்மை ஒருமுறை பார்ப்பதற்காக ஹோட்டலில் காத்திருந்ததாகவும் காதலித்ததாகவும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்தேலா கடந்த சில மாதங்களுக்கு முன் கூறியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இருப்பினும் பெயரையும் புகழையும் வாங்குவதற்காக தம்மை வம்புக்கு இழுக்காதீர்கள் என்று அவர் அதற்கு பதிலடி கொடுத்தார்.

Advertisement