வீடியோ : காரை மட்டும் பொறுமையா ஓட்டு, 3 வருடத்துக்கு முன்பே ரிஷப் பண்ட்டுக்கு அட்வைஸ் கொடுத்த ஷிகர் தவான்

shikhar dhawan rishabh pant
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்தில் சிக்கியது அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. கடைசியாக கடந்த வாரம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த அவர் அடுத்ததாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஏற்கனவே சந்தித்திருந்த லேசான காயத்திலிருந்து முழுமையாக குணமடைவதற்காக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வதற்காக இலங்கைத் தொடரில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியாகின. அந்த நிலையில் வங்கதேச தொடருக்குப்பின் டேராடூன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து புத்தாண்டுக்காக வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளானார்.

அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் சாதுரியமாக செயல்பட்டு காரிலிருந்து வெளியே வந்த அவரை அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களில் அவர் ஓட்டி வந்த பிஎம்டபிள்யூ கார் நெருப்பில் பற்றி ஏரிந்தது. அந்த வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாகவும் எலும்பு முறிவை சந்திக்கவில்லை என்றும் ரசிகர்கள் ஆறுதலடையும் வகையில் செய்திகள் வெளியாகி வருகிறது.

- Advertisement -

தவானின் அறிவுரை:
அதனால் விரைவில் குணமடைந்து இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வர வேண்டும் என்று உலக அளவில் ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் நட்சத்திரங்களும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். முன்னதாக இந்த விபத்தில் ரிஷப் பண்ட் கவனக்குறைவு முக்கிய பங்காற்றியதை அவரே காவல்துறை அறிக்கையில் கூறியுள்ளார். அதாவது பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அதிரடியாக விளையாடும் தன்மையை கொண்ட அவர் அதிகாலை 5.30 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் வேகத்துடன் காரை ஓட்டி வந்துள்ளார்.

அந்த சமயம் பார்த்து துரதிஷ்டவசமாக தூக்க கலக்கத்தை சந்தித்த காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அதற்கு ஆதாரமாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் என்னதான் இருந்தாலும் ரிசப் பண்ட் இவ்வளவு வேகமாக காரை ஒட்டியிருக்க கூடாது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய போது மூத்த வீரர் ஷிகர் தவான் மற்றும் ரிஷபன்ட் ஆகியோர் விளையாடியதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

அப்போது ரசிகர்களை கவர்வதற்காக ஒருவரை ஒருவர் கேள்வி பதிலளிக்கும் நிகழ்ச்சிக்கு டெல்லி நிர்வாகம் நடத்தியது. முன்னதாக தம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த ரிசப் பண்ட் தம்முடன் உள்ளூர் அளவில் நிறைய போட்டிகளில் விளையாடியதை வைத்து அவருடைய குண நலன்களை ஷிகர் தவான் நன்கு தெரிந்து வைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக அவருடன் நிறைய தருணங்களில் காரில் பயணிக்கும் போது ரிஷப் பண்ட் வேகமான டிரைவிங் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதையும் சிகர் தவான் தெரிந்து வைத்துள்ளார்.

அந்த நிலையில் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் “ஏதேனும் ஒரு விஷயத்தில் நான் முன்னேற விரும்பினால் அதற்காக நீங்கள் எனக்கு கொடுக்க விரும்பும் அட்வைஸ் என்ன” என்று ரிஷப் பண்ட் கேள்வி எழுப்புகிறார். அதற்கு “பயணிக்கும் போது வாகனத்தை கவனமாகவும் மெதுவாகவும் ஓட்டு” என்பதே உங்களுக்கு என்னுடைய அட்வைஸ் என்று ஷிகர் தவான் பதிலளிக்கிறார். அதைக் கேட்ட ரிசப் பண்ட் “சரி, இனிமேல் நான் வண்டியை மெதுவாக ஓட்டுகிறேன்” என்று பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்கடி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை ட்ராப் பண்ணிட்டு அவங்களுக்கு சான்ஸ் கொடுங்க – கம்பீர் அதிரடி கோரிக்கை

அந்த வகையில் 3 வருடத்திற்கு முன்பே சிகர் தவான் கிரிக்கெட்டையும் தாண்டி வாழ்க்கைக்கு தேவையான அட்வைஸ் கொடுத்துள்ளதை பார்க்கும் ரசிகர்கள் அதை மட்டும் ரிசப் பண்ட் பின்பற்றியிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இருப்பினும் விதியைப் போல் இந்த நிலைமையை சந்தித்த அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement