டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை ட்ராப் பண்ணிட்டு அவங்களுக்கு சான்ஸ் கொடுங்க – கம்பீர் அதிரடி கோரிக்கை

Gautam Gambhir Rohit Sharma Virat Kohli
- Advertisement -

வங்கதேச சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதா அல்லது நீக்கப்பட்டார்களா என்பது தெரியாத நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் சூரியகுமாரி யாதவ், இசான் கிசான் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதிலாக 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதனாலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் இலங்கை டி20 தொடரில் விளையாட உள்ளனர். மறுபுறம் 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்துவதற்காக ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

காலம் கடந்துட்டாங்க:
அத்துடன் இந்திய ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர வீரர்களான அவர்கள் டி20 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர் வரும் போது நிச்சயம் டி20 அணியில் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக காலம் கடந்த ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் போன்றவர்களுக்கு பதிலாக பிரிதிவி ஷா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் சுமாராக செயல்பட்டுள்ள நிலையில் 2022 டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்த வருடம் சூரியகுமாருக்கு பின் அதிக (781) ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த விராட் கோலியையும் கழற்றி விடுமாறு கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் அதிரடியாக பேசியது பின்வருமாறு. “நமது அணியில் தெளிவு இருக்க வேண்டும். குறிப்பாக தேர்வுக்குழு மற்றும் வீரர்களுக்கிடையே தெளிவு இருக்க வேண்டும். ஒருவேளை சீனியர் வீரர்களை தாண்டி வருங்காலத்தை தேர்வு குழுவினர் பார்த்தால் அதில் தவறில்லை. அனேகமாக அதை ஏற்கனவே நிறைய நாடுகள் செயல்படுத்தி வருகின்றன”

- Advertisement -

“மேலும் தேர்வாளர்களும் நிர்வாகமும் குறிப்பிட்ட நட்சத்திர வீரர்களை தாண்டிப் பார்க்கும்போது நாம் (ரசிகர்கள்) மிகவும் சாயல் பார்த்து அழுகிறோம்.
ஆனால் இது தனிநபர்களைப் பற்றியதல்ல. மாறாக 2024 டி20 உலகக் கோப்பைக்காக உங்கள் திட்டங்களைப் பின்பற்றி நீங்கள் எவ்வாறு செல்ல விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஏனென்றால் நீங்கள் அந்த உலகக் கோப்பையில் வெற்றி பெற விரும்புகிறீர்கள். இவர்களால் (சீனியர்கள்) அதை அடைய முடியவில்லை என்றால் சூர்யகுமார் போன்ற இளைய தலைமுறையினர் அந்த கனவை நனவாக்க முடியும்”

“என்னை கேட்டால் நான் கடினமான முடிவுகளை எடுக்கச் சொல்வேன். குறிப்பாக அவர்களது இடத்தில் சூரியகுமார் யாதவ், இசான் கிசான் ஆகியோர் இருக்க வேண்டும். ஏற்கனவே ஹர்திக் பாண்டியா இருக்கும் நிலையில் ராகுல் திரிபாதி, பிரத்வி ஷா, சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள். ஏனெனில் அவர்களால் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட முடியும். மேலும் கடந்த டி20 உலக கோப்பையில் நாம் அதிரடியாக விளையாடும் அணுகு முறையைப் பற்றி பேசினோம்”

இதையும் படிங்கஎது இந்தியா – பாகிஸ்தானா? யாருக்கு வேணும். அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல – பி.சி.சி.ஐ அதிரடி

“ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் அந்த அணுகுமுறை ஜன்னலுக்கு வெளியே காணாமல் போய்விட்டது. ஒருவேளை அந்த அணுகுமுறையை இளம் தலைமுறையினர் சாதித்து காட்டலாம். ஏனெனில் இந்தியாவுக்காக அனைவரும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட நினைக்கிறார்கள். எனவே இந்த இலங்கை தொடரில் வாய்ப்பு பெறும் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வாய்ப்பு பெறாத (சீனியர்) வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாகி விடும்” என்று கூறினார்.

Advertisement