எது இந்தியா – பாகிஸ்தானா? யாருக்கு வேணும். அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல – பி.சி.சி.ஐ அதிரடி

BCCI
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போது நடைபெற்றாலும் அந்த போட்டியானது உலக ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக இழுக்கும். அதேபோன்று கிரிக்கெட் உலகில் பரம எதிரியாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தும். அந்த வகையில் அண்மையில் ஆஸ்திரலேயாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டி அதிக ரசிகர்கள் கண்ட போட்டியாக சாதனை படைத்தது.

இப்படி இந்தியா பாகிஸ்தான் போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றிருந்தாலும், இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான சில பாதுகாப்பு காரணங்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் நடைபெறுவதில்லை. ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் மட்டும் பொதுவான நாடுகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபகாலமாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் நடைபெறவேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விட்ட்டோரியா மாகாண அரசும் இணைந்து இந்தியா பாகிஸ்தான் போட்டியா மெல்போர்ன் மைதானத்தில் நடத்த விருப்பம் தெரிவித்தது.

ஆனால் எந்தவேளையிலும் இப்படியொரு இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை எங்களிடம் அறவே இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் நிர்வாக வாரிய வட்டாரங்கள் கூறும் போது :

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடர் போன்றே இந்த தொடரும் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் – டிவில்லியர்ஸ் கருத்து

எதிர் காலத்திலோ அல்லது எந்த ஒரு பொதுவான நாட்டிலோ கூட இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக திட்டங்கள் எதுவும் எங்களிடம் இல்லை. யாருக்காவது அத்தகைய விருப்பம் இருந்தால் அதை அவர்களே வைத்து கொள்ளுங்கள் என்று பி.சி.சி.ஐ அதிரடியாக தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement