ஐ.பி.எல் தொடர் போன்றே இந்த தொடரும் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் – டிவில்லியர்ஸ் கருத்து

ABD
Advertisement

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐ.பி.எல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 16-ஆவது ஐ.பி.எல் தொடரானது எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து பணிகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் அண்மையில் நடைபெற்று முடிந்தது.

IPL 2022 (2)

ஐ.பி.எல் தொடரின் மூலம் பல்வேறு இளம்வீரர்கள் இந்திய முதன்மை கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்துள்ளனர். அந்த அளவிற்கு ஐ.பி.எல் தொடரானது இளம்வீரர்களுக்கு தங்களது திறனை வெளிக்காட்ட ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஐ.பி.எல் தொடரின் மூலம் இளம்வீரர்கள் பலரும் கோடிஸ்வரராக கூட மாறியுள்ளதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது போன்று தென்னாப்பிரிக்க நாட்டிலும் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை ஐ.பி.எல் உரிமையாளர்களே விலைக்கு வாங்கியுள்ளனர். இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

abd

இந்த தொடரானது வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவங்கவுள்ள வேளையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள தெ.ஆ அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மிகச்சரியான நேரத்தில் தென் ஆப்பிரிக்க லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது.

இதையும் படிங்க : ஐசிசி சர்வதேச கிரிக்கெட் விருதுகள் 2022 : எத்தனை இந்தியர்கள் தேர்வு? மொத்த பரிந்துரை பட்டியல் இதோ

மேலும் இளம் வீரர்கள் இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், ஐ.பி.எல். தங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றியது என்றும் அதேபோன்று தெ.ஆ இளம்வீரர்களின் வாழ்க்கையை நிச்சயம் இந்த தொடரானது மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement