ஐசிசி சர்வதேச கிரிக்கெட் விருதுகள் 2022 : எத்தனை இந்தியர்கள் தேர்வு? மொத்த பரிந்துரை பட்டியல் இதோ

Suryakumar-Yadav
- Advertisement -

2022 ஆங்கில வருடம் நிறைவுக்கு வரும் நிலையில் ஒட்டுமொத்த உலகமும் 2023 புதிய ஆங்கில புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது. அதே சமயம் இந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் உலகம் முழுவதிலும் நிறைய வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கௌரவித்து வருகிறது.

அந்த வரிசையில் 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை 13 பிரிவின் கீழ் ஐசிசி கௌரவிக்க உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆடவர் டி20 உலக கோப்பை, நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் தங்களது நாட்டுக்கு சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கண்டறிந்துள்ள ஐசிசி அவர்களுக்கு விருது வழங்க உள்ளது. ஐசிசி பரிந்துரைத்துள்ள பட்டியல் இதோ:

- Advertisement -

சிறந்த கிரிக்கெட் வீரர்: 2022ஆம் ஆண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கிய வீரருக்கு வழங்கப்படும் விருதுக்கு இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், நியூசிலாந்து டிம் சவுதி மற்றும் ஜிம்பாவேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

2022ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருது தான் இந்த பட்டியலில் மிகவும் உச்சகட்டமான விருதாகும். இதை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் சர் கெர்பீல்ட் சோபர்ஸ் பெயரில் ஐசிசி கொடுத்து வருகிறது.

- Advertisement -

சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: அதே போல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீராங்கனைக்கு கொடுக்கப்படும் விருந்துக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, இங்கிலாந்தின் நட் ஸ்கீவர், நியூசிலாந்தின் அமிலியா கெர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். மகளிர் கிரிக்கெட்டில் உச்சகட்டமான இவ்விருதை ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் வீராங்கனை ரிச்சல் ஹேய்ஹோ பிளின்ட் பெயரில் ஐசிசி கொடுத்து வருகிறது.

சிறந்த டெஸ்ட் வீரர்: 2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, தென்னாப்பிரிக்காவின் ககிஸோ ரபாடா ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

சிறந்த ஒருநாள் வீரர்: 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா, ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா, வெஸ்ட் இண்டீசின் சாய் ஹோப் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த ஒருநாள் வீராங்கனை: 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, இங்கிலாந்தின் நட் ஸ்கீவர், நியூசிலாந்தின் அமிலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் சப்நிம் இஸ்மாயில் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சிறந்த டி20 வீரர்: 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதுக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர மற்றும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், ஜிம்பாவேயின் சிக்கந்தர் ராசா, இங்கிலாந்தின் சாம் கரண், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த டி20 வீராங்கனை: 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருந்துக்கு இந்தியாவின் ஸ்ருதி மந்தனா, பாகிஸ்தானின் நிதா தார், நியூசிலாந்தின் சோபி டேவின், ஆஸ்திரேலியாவின் தகிலா மெக்ராத் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

வளரும் வீரர்: 2022ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு இந்தியாவின் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங், தென்னாப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜான்ரான், நியூசிலாந்தின் பின் ஆலன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

வளரும் வீராங்கனை: 2022ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் ரேணுகா சிங் மற்றும் யாஸ்திகா பாட்டியா, ஆஸ்திரேலியாவின் டார்சி ப்ரவுன், இங்கிலாந்தின் அலிஸ் கேப்சி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்கஅவருக்கான முழு செலவையும் நான் ஏத்துக்குறேன். தேவைன்னா அதையும் பண்றேன் – உத்தரகாண்ட் முதல்வர் வாக்குறுதி

மொத்தத்தில் இந்தியாவிலிருந்து சூரியகுமார் யாதவ், அர்ஷிதீப் சிங், ஸ்மிருதி மந்தனா, ரேணுகா சிங், யாஸ்திகா பாட்டியா ஆகியோர் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இது போக 2022ஆம் ஆண்டின் சிறந்த உறுப்பு நாட்டு வீரர், வீராங்கனை மற்றும் சிறந்த அம்பையர் விருதுகளையும் வழங்கவிருக்கும் ஐசிசி 2022ஆம் ஆண்டில் நேர்மைக்கு அடையாளமாக செயல்பட்ட ஒரு வீரர் அல்லது வீராங்கனைக்கும் விருது வழங்க உள்ளது.

Advertisement