தவறு செய்த பாண்டே. கண்டுக்காத அம்பயர். கோவத்தில் கத்திய கோலி – வைரலாகும் வீடியோ

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று ஆக்லாந்து மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Williamson

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும் குவித்தனர். அதனால் தற்போது இந்திய அணி 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

இந்தப்போட்டியில் 20 ஆவது ஓவரை வீசிய பும்ராவின் பந்துவீச்சில் டைலர் பந்தை பவுண்டரிக்கு அடிக்க அந்த பந்தை முன்கூட்டியே தடுக்க வந்த மணீஷ் பாண்டே பந்தினை தவறவிட்டார் இருப்பினும் பந்தை எடுத்தது போல வெறும் கையால் த்ரோ செய்வது போல நடித்தார். ஆனால் நல்ல வேளை இதை அம்பயர் கவனிக்கவில்லை.

ஒருவேளை அதனை அம்பயர் கவனித்து இருந்தால் “பேக் பீல்டிங்” (Fake Fielding) விதிப்படி இந்திய அணிக்கு 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாண்டே இந்தப் பந்தை தவறவிட்டதை கவனித்த கோலி அவரை நோக்கி கோபமாக கத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement