ஷிம்ரன் ஹெட்மயர் முதல் பிலிப் சால்ட் வரை அனைவரது பேட்டையும் செக் பண்ணிய அம்பயர் – எதற்கு தெரியுமா?

Bat Check
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது ஜெய்ப்பூர் நகரில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

வீரர்களின் பேட்டை பரிசோதித்த அம்பயர்கள் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்ச ஜெய்ஸ்வால் 75 ரன்களையும், துருவ் ஜுரேல் 35 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக புவனேஸ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசல்வுட், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 17.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 175 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக துவக்கவீரர் பிலிப் சால்ட் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்த வேளையில் விராட் கோலி 62 ரன்களுடனும், படிக்கல் 40 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது களத்தில் இருந்த அம்பயர்கள் இரு அணிகளை சேர்ந்த வீரர்களின் பேட்டையும் தொடர்ச்சியாக ஒரு கருவின் மூலம் பரிசோதனை செய்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் மைதானத்திற்கு பேட்டிங் செய்ய வந்த அனைத்து பேட்ஸ்மேன்களுமே விளையாட ஆரம்பிப்பதற்கு முன்னதாக அம்பயரின் மூலம் ஒரு பிரத்யேக கருவி கொண்டு பரிசோதிக்கப்பட்டனர்.

- Advertisement -

இதற்கு காரணம் யாதெனில் : தற்போது டி20 கிரிக்கெட்டில் வீரர்கள் பயன்படுத்தும் பேட்கள் மிக வலிமையாக மாறி வருவதால் எளிதாக சிக்ஸர்கள் பறக்கின்றன. அதனால் ஒரு சில கட்டுப்பாடுகளை ஐபிஎல் டி20 தொடர் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் ஐபிஎல் 5.7 என்கிற விதிமுறைப்படி : வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகள் சில விதிமுறைகளுக்கு உட்பட்ட அளவில்தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சி.எஸ்.கே தேர்வுசெய்ய சரியான 3 மாற்றுவீரார்கள் – லிஸ்ட் இதோ

அந்தவகையில் எந்த ஒரு பேட்டும் 38 இன்ச்சுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. மேலும் பேட்டின் அகலம் 4.25 இன்ச்சாகவும், நீளம் 2.64 இன்ச்சாகவும், பேட்டின் முனைகள் 1.56 இன்ச் வரைதான் இருக்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறைக்கு மீறி பேட்டின் அளவு இருந்தால் அந்த பேட்டை போட்டிகளின் போது பயன்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement