ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சி.எஸ்.கே தேர்வுசெய்ய சரியான 3 மாற்றுவீரார்கள் – லிஸ்ட் இதோ

Ruturaj Gaikwad
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்தி வருகிறார். இந்த தொடரின் முதல் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 5 தோல்விகளுடன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ருதுராஜ் கெய்க்வாடுக்கு சரியான 3 மாற்று வீரர்கள் :

சிஎஸ்கே அணி பெற்று வரும் இந்த தொடர் தோல்விகள் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வரும் வேளையில் சென்னை அணி இன்னும் வெற்றி பாதைக்கு திரும்பாதது அந்த அணியின் நிர்வாகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அணி ஏற்கனவே அதிரடியான பேட்டிங் செய்யும் வீரர்கள் இல்லாமல் தடுமாறி வரும் வேளையில் நட்சத்திர வீரரான ருதுராஜும் வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சரியான மாற்றுவீரரை தேர்வு செய்தால் அந்த சரிவை சற்று சமாளிக்கலாம். அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு சரியான மாற்று வீரராக இருக்கக்கூடிய மூன்று வீரர்கள் குறித்த பட்டியலை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் இந்த பட்டியலில் முதல் மாற்று வீரராக ப்ரித்வி ஷாவை தேர்வு செய்யலாம்.

ப்ரித்வி ஷா : கடந்த 2025 மெகா ஏலத்தில் இவரை யாரும் எடுக்கவில்லை ஆனாலும் 2018 முதல் 2024 வரை செல்லி அணிக்காக விளையாடியுள்ள அவர் 79 போட்டிகளில் 1892 ரன்கள் குவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாக இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ள அவர் அதிரடியான துவக்கத்தை அளிக்கக் கூடியவர் என்பதனால் 25 வயதான இவரை ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்று வீரராக தேர்வு செய்யலாம். இவர் மூலம் சிஎஸ்கே அணிக்கு அதிரடியான துவக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

மாயங்க் அகர்வால் : ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்கு விளையாடிய அனுபவமுள்ள இவர் ருதுராஜ் கெய்க்வாட் போலவே துவக்க வீரராகவும், மூன்றாவது இடத்திலும் களமிறங்கக்கூடிய பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார். அதிரடியாக விளையாடக் கூடிய இவரால் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸும் விளையாட முடியும் என்பதனால் இவரை மாற்றுவீரராக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஐசிசி பணத்தில் ஊழல் செய்த பாகிஸ்தான்.. பைக்கை விற்று உரம் வாங்கிய சோகம்.. சாம்பியன்ஸ் ட்ராபியில் ஆட்டை?

ஆயுஷ் மாத்ரே : ஏற்கனவே சி எஸ் கே அணியின் ட்ரயல்ஸ் போட்டிகளுக்காக இவர் சென்னை வந்து பங்கேற்றிருந்த வேளையில் மும்பையை சேர்ந்த இளம் வீரரான இவரையும் கெய்க்வாடுக்கு பதிலாக விளையாட வைத்தால் எதிர்காலத்தில் அவர் சென்னை அணிக்காக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement