ஐசிசி பணத்தில் ஊழல் செய்த பாகிஸ்தான்.. பைக்கை விற்று உரம் வாங்கிய சோகம்.. சாம்பியன்ஸ் ட்ராபியில் ஆட்டை?

IND vs PAK
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்தது. அந்தத் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் சொந்த மண்ணில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் வெளியேறியது. மறுபுறம் பாதுகாப்பு பிரச்சனைகளால் துபாயில் தங்களது போட்டிகளை விளையாடிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் 12 வருடங்கள் கழித்து கோப்பையை முத்தமிட்டது.

முன்னதாக அந்தத் தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் வாரியத்திற்கு ஐசிசி சுமார் 70 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் தொகையை ஒதுக்கியது. அதை வைத்து கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய தங்களது நாட்டில் உள்ள 3 முக்கிய மைதானங்களை பாகிஸ்தான் வாரியம் புதுப்பித்தது. அதற்கு செலவு அதிகமானதால் கடைசியில் எக்ஸ்ட்ரா தொகை வேண்டும் என்றும் ஐசிசியிடம் பாகிஸ்தான் வாரியம் கேட்டுப் பெற்றது.

- Advertisement -

ஐசிசி பணத்தில் ஊழல்:

இந்த சூழ்நிலையில் ஐசிசியிடம் பெற்றத் தொகையை பாகிஸ்தான் முழுமையாக சரியாக செலவு செய்யாமல் ஊழல் செய்துள்ளதாக அந்நாட்டு வாரியத்தின் பிரபல பத்திரிக்கையாளர் சாஹித் ஹஸ்மி விமர்சித்துள்ளார். குறிப்பாக ராவல்பிண்டி மைதானத்தில் வெளிப்புற களத்தில் பச்சைப் புற்களை வளர்ப்பதற்கு தேவையானப் பணத்தை பாகிஸ்தான் வாரியம் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதனால் அந்த மைதானத்தின் தயாரிப்பாளர் தனது மோட்டார் பைக்கை விற்று சொந்த பணத்தில் உரம் வாங்கியதாக ஹஸ்மி கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பணத்தை இதுவரை மைதானப் பராமரிப்பாளருக்கு பாகிஸ்தான் வாரியம் கொடுக்கவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி சாமா டிவி எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நேற்று எனக்கு ஒரு விசித்திரமான செய்தி கிடைத்தது. ராவல்பிண்டி மைதானத்தில் பராமரிப்புக்காக உரங்கள் தேவைப்பட்டன”

- Advertisement -

பைக்கை விற்ற சோகம்:

“எனவே அதற்கான பட்ஜெட் மற்றும் செலவு பற்றிய விவரங்கள் பாகிஸ்தான் வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது எங்கேயோ மறைக்கப்பட்டு விட்டது. அதனால் மைதானப் பராமரிப்பாளர் தனது சொந்த மோட்டர் பைக்கை விற்று மைதானத்திற்குத் தேவையான உரங்களை வாங்கினார். இதை விட மோசம் இருக்க முடியுமா? நீங்கள் தேவையான பணம் கொடுக்காததால் பராமரிப்பாளர் தனது வேலையை செய்ய சொந்த மோட்டர் பைக்கை பெற்றுள்ளார்”

இதையும் படிங்க: தோத்தாலும் பரவால்ல இந்த 2 ரிக்ஸ் எடுங்க.. சிஎஸ்கே அணிக்கு மைக்கேல் கிளார்க், பியூஸ் சாவ்லா அட்வைஸ்

“இது போக நேற்று பிஎஸ்எல் தொடரில் கராச்சி மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு முன்பாக பிட்ச் மேலே பெரிய பருத்தித் துணியை விரித்து அதற்கு மேலே தண்ணியை தெளித்தனர். அந்த துணியை வாங்குவதற்கான செலவை மைதானத்தில் இருந்த பணியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடருக்காக கிடைத்த பட்ஜெட் தொகை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை” என்று கூறினார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் ஐசி பணத்தை பாகிஸ்தான் வாரியம் ஆட்டைய போட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசுகின்றனர்.

Advertisement