தோத்தாலும் பரவால்ல இந்த 2 ரிக்ஸ் எடுங்க.. சிஎஸ்கே அணிக்கு மைக்கேல் கிளார்க், பியூஸ் சாவ்லா அட்வைஸ்

Micheal Clarke
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசில் போட முடியாத அளவுக்கு மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் திண்டாடுகிறது. இந்த வருடம் மும்பைக்கு எதிராக முதல் போட்டியில் வென்ற மும்பை அதற்கடுத்த 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோற்றது. அதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக 5 போட்டிகளில் சென்னை தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து மோசமான சாதனைப் படைத்தது.

அத்துடன் தங்களுடைய கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை முதல் முறையாக தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றது. அதிலும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மோசமாக பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 103/9 ரன்கள் எடுத்தது. ஆனால் அதே ரன்களை கொல்கத்தா வெறும் 10.1 ஓவரில் எடுத்து வென்றது.

- Advertisement -

ரிஸ்க் எடுங்க:

அந்தளவுக்கு சென்னை அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மட்டமாக விளையாடி பாதாளத்தில் விழுந்துள்ளது. இந்நிலையில் 20 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று நினைக்காமல் ரிஸ்க் எடுத்து தோற்றாலும் பரவாயில்லை என்ற உணர்வுடன் அதிரடியாக விளையாடுமாறு சென்னைக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பிட்ச் ஆரம்பத்திலேயே பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக இருந்தது. அங்கே சென்னை தங்களது திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியது. அவர்கள் தோற்ற விதத்தால் கண்டிப்பாக தன்னம்பிக்கையை இழந்திருப்பார்கள். அதே சமயம் அவர்களிடம் அதிரடியாக விளையாடும் எண்ணம் இல்லை”

- Advertisement -

இளம் வீரர்கள்:

“மாறாக வெற்றியை நெருங்குவோம் அல்லது பெரியத் தோல்வியைத் தவிர்ப்போம் என்ற பழமை வாதத்தில் விளையாடுகின்றனர். என்னைக் கேட்டால் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அனைத்திலும் ரிஸ்க் எடுத்து போட்டியை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்வது சொல்வதை விட கடினம்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் முன்னாள் வீரர் பேசிய பியூஸ் சாவ்லா இளம் வீரர்களை வைத்து விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ஏசில உட்கார்ந்துகிட்டு என்னை கிண்டல் செய்ற அவங்க.. முதல்ல சொந்த ரெக்கார்ட்டை பாக்கனும்.. தாக்கூர் பதிலடி

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சமயத்தில் சென்னை இளம் வீரர்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஆண்ட்ரே சித்தார்த் போன்ற திடமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விளையாடத் தகுதி உடையவர். தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி போன்றவர்களை நீங்கள் போதுமான அளவு பார்த்து விட்டீர்கள். எனவே ஏன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது? புதிய முகங்கள் வந்து வேகமாக ரன்கள் குவித்தால் அவர்களுக்கு மட்டுமின்றி மொத்த அணியின் தன்னம்பிக்கையும் உயர்ந்து வரும். அதற்காக மொத்தமாக மாற்றச் சொல்லவில்லை. ஓரிரு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்” எனக் கூறினார்.

Advertisement