நான் இன்னும் ரெடி ஆகல.. ரபாடா மற்றும் அம்பயரிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் – நடந்தது என்ன?

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1:30 மணி அளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடாததால் கே.எல் ராகுல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அதன்படி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. கடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது சிறப்பான துவக்கத்தை அளித்த ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி இம்முறையும் நல்ல துவக்கம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 36 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அப்போது 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மாயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் வழக்கம்போல் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இருந்து வெளியேற இந்திய அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. அதன்பின்னர் ராகுலுடன் விஹாரி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறிதுநேரம் கை கோர்த்தாலும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.

- Advertisement -

அடுத்தடுத்து விஹாரி, ராகுல், ரிஷப் பண்ட் என ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணியானது 157 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து வந்த வேளையிலும் சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் மற்றும் கேப்டன் ராகுல் இந்த முதல் இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியின் போது ராகுல் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா மற்றும் அம்பயரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த முதல் இன்னிங்சின் ஐந்தாவது ஓவரை வீச ஓடிவந்த ரபாடா ஓடிவந்தார். ஆனால் அப்போது ராகுல் அந்த பந்திற்கு தயாராகவில்லை என்பதால் கடைசி நேரத்தில் அந்த பந்தினை விளையாடாமல் கிரீசை விட்டு நகர்ந்து சென்றார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னதாங்க பண்றாங்க இவங்க ரெண்டு பேரும். மீண்டும் மீண்டும் சொதப்பும் சீனியர்கள் – கடுப்பான ரசிகர்கள்

கிரீசுக்கு அருகில் வந்த ரபாடா எப்படியோ சுதாரித்துக் கொண்டு பந்து வீசுவதை நிறுத்தினார். உடனே ராகுலை நோக்கி பந்தை விட வேண்டுமென்றால் முன் கூட்டியே முடிவு செய்யுங்கள் இதுபோன்ற செய்யக்கூடாது என்று அம்பயர் எச்சரித்தார். ஆனாலும் அதற்கு முன்னதாக ராகுல் உடனடியாக பந்துவீச்சாளர் ரபாடா மற்றும் அம்பயரிடமும் தனது மன்னிப்பை கேட்டு கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement