என்னதாங்க பண்றாங்க இவங்க ரெண்டு பேரும். மீண்டும் மீண்டும் சொதப்பும் சீனியர்கள் – கடுப்பான ரசிகர்கள்

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை என்பதனால் அணியின் கேப்டனாக ராகுல் செயல்பட்டு வருகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். கடந்த போன்ற சிறப்பான தொடக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அகர்வால் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

agarwal-1

- Advertisement -

அப்போது இந்திய அணி தங்களது 36 ரன்னிற்கு முதல் விக்கெட்டை இழந்தது. பின்னர் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் மிடில் ஆர்டரில் ராகுலுடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புஜாரா 33 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையிலும் அதற்கு அடுத்த பந்திலேயே ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இப்படி அடுத்தடுத்த பந்தில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் விஹாரி சிறிது நேரம் ராகுலுடன் இணைந்து விளையாடினார். ஒரு கட்டத்தில் விஹாரியும் ஆட்டமிழந்தும் வெளியேற இந்திய அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு நிதானமாக விளையாடிய அணியின் கேப்டன் ராகுலும் 133 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவ்வேளையில் இந்திய அணி 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தற்போது விளையாடி வருகிறது.

pujara 1

இந்நிலையில் இந்த போட்டியிலும் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை கிளப்பி உள்ளது. ஏனெனில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவருமே கடந்த பல தொடர்களாக பெரிய அளவில் ரன் குவிக்காமல் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பெரிய விமர்சனங்களுக்கு மத்தியில் வாய்ப்பை பெற்று வரும் இவர்கள் இருவரும் தொடர்ச்சியான சொதப்பலை வெளிப்படுத்தி வருகின்றனர். நியூசிலாந்து தொடரின் போதே இவர்களின் ஆட்டம் பெரியளவில் விமர்சிக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு வழியாக இந்திய அணியில் வாய்ப்பை பெற்ற இளம் வீரர். விராட் கோலியின் – மாற்றுவீரர் யார் தெரியுமா?

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடரிலும் அனுபவம் காரணமாக இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தொடரிலும் முதல் டெஸ்டி போட்டி மட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் சரி தொடர்ச்சியாக இவர்கள் சொதப்பி வருவதால் அடுத்த போட்டியில் நிச்சயம் இவர்கள் இருவரில் ஒருவராவது அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement