ஒரு வழியாக இந்திய அணியில் வாய்ப்பை பெற்ற இளம் வீரர். விராட் கோலியின் – மாற்றுவீரர் யார் தெரியுமா?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஜொகனஸ்பர்க் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக தொடரை கைப்பற்ற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக விளையாடாததால் அணியின் புதிய கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வருகிறார்.

INDvsRSA

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன் காரணமாக தற்போது இந்திய அணி தங்களது முதலாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி இடம்பெறாததன் காரணமாக மிடில் ஆர்டரில் இளம் வீரரான ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவரது பெயர் இடம்பெறாத போதே அனைவரது மத்தியிலும் இந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. விராட் கோலி காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் விஹாரி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்காக இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 624 ரன்களை குவித்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற போட்டியின் போது அஷ்வினுடன் இணைந்து விளையாடிய ஆட்டம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Vihari

இவ்வேளையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு விஹாரி தனது இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இனி வரும் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் விஹாரி தனது வாய்ப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த வேளையில் இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக அவருக்கு இடம் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : கங்குலிக்கு ஏற்பட்டுள்ளது டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு – முக்கிய கண்டிஷனுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

அதேவேளையில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த தொடருக்கு பின்னர் அவர்களது இடம் கேள்விக்குறியாகும் பட்சத்தில் ஹனுமா விஹாரிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement