நியூஸிலாந்தில் நிகழ்ந்த காமெடி.. பேட் இல்லாமலேயே ரன் எடுக்க ஓடிய ரிஸ்வான்.. கடைசில் நேர்ந்த பரிதாபம்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோற்றுள்ளது. குறிப்பாக ஜனவரி 17ஆம் தேதி டுனிடின் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான் 3 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கி கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்டுள்ளது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் நியூசிலாந்து ஃபின் ஆலன் சதமடித்து 137 (62) ரன்கள் விளாசிய உதவியுடன் 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் மட்டுமே அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவரில் 179/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரிஸ்வான் செய்த காமெடி:
முன்னதாக அந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 5வது ஓவரின் 5வது பந்தை தடுப்பாட்டமாக விளையாடி சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது பந்தை அடித்த பின் பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறிய அவர் தம்முடைய கையிலிருந்த பேட் கீழே விட்டு விழ சென்றார். ஆனால் தன்னுடைய 2 கைகளை தரையில் ஊன்றி பேலன்ஸ் செய்த அவர் உடனடியாக ரன்கள் எடுப்பதற்காக பேட்டை எடுக்காமலேயே ஓடினார்.

இருப்பினும் கையில் பேட் இல்லாத காரணத்தால் எதிர்புறம் உள்ள வெள்ளை கோட்டை விரல்களால் தொட்ட அவர் மீண்டும் 2வது ரன் எடுக்க ஓடினார். அப்போது எதிரணியினர் ரன் அவுட் செய்ய முயற்சித்த போதிலும் அதற்கெல்லாம் அசராத ரிஸ்வான் டைவ் அடித்து தன்னை காப்பாற்றி 2 ரன்களையும் எடுத்தார். ஆனால் அதை உறுதி செய்வதற்காக 3வது நடுவர் அவருடைய ஓட்டத்தை சோதித்துப் பார்த்தார்கள்.

- Advertisement -

அப்போது முதல் ரன் எடுப்பதற்காக எதிர்ப்புறம் உள்ள வெள்ளைக்கோட்டை முகமது ரிஸ்வான் முழுமையாக தொடாதது தெரிய வந்தது. குறிப்பாக வெள்ளை கோட்டுக்கும் அவருடைய விரல்களுக்கும் 2 – 3 சென்டிமீட்டர் இடைவெளி இருந்தது நன்றாக தெரிந்ததால் அவர் ஓடி எடுத்த 2 ரன்களை கொடுக்க முடியாது என்று நடுவர் புதிய தீர்ப்பை வழங்கினார்

இதையும் படிங்க: அதை பற்றில்லாம் தெரியாது.. எங்ககிட்ட திட்டம் ரெடியா இருக்கு.. இங்கிலாந்து தொடர் பற்றி ஸ்ரேயாஸ் பேட்டி

அதனால் மிகவும் ஏமாற்றமடைந்த ரிஸ்வான் இவ்வளவு வெறித்தனமாக கையில் பேட் இல்லாமல் ஓடியும் ரன் கிடைக்கவில்லையே என்று தன்னுடைய தலையில் கையை வைத்து பரிதாபத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் “வாவ். அம்பயர் ஷார்ட் சிக்னல் கொடுத்து விட்டதால் இது காமெடியாகி விட்டது. நீங்கள் முதல் ரன்னை வெள்ளைக்கோட்டை தொட்டு எடுக்காமல் போனால் 2வது ரன்னும் கொடுக்கப்படாது” என்று நேரலையில் வர்ணனையாளர்கள் பேசி கலாய்த்தனர்.

Advertisement