இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் சென்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்திருந்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில், ரவீந்திர ஜடேஜா 110 ரன்கள் எடுத்த நிலையில் முதல்நாளின் முடிவில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதும் இந்திய அணி 331 ரன்களை எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 331 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் தற்போது எட்டாவது விக்கெட் ஜோடி சேர்ந்துள்ள அறிமுக வீரர் துருவ் ஜுரேல் மற்றும் அஸ்வின் ஆகியோரது ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்து அற்புதமான ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் குவித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த ஒரு தவறால் இந்திய அணிக்கு அம்பயர் மைதானத்திலேயே 5 ரன்கள் பெனால்டி வழங்கினார்.
அதோடு இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை ஆரம்பிக்கும் போதே 5-0 என்கிற போனஸ் ரன்களுடன் தான் விளையாடும் என்று அம்பயர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் யாதெனில் : நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் போதே ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தின் நடு திசையில் ஓடியதால் களத்தில் இருந்த அம்பயர்கள் மூலம் வார்னிங் செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து இதேபோல் நடக்கூடாது என இந்திய அணியையும் அம்பயர்கள் எச்சரித்திருந்தனர்.
இதையும் படிங்க : 7க்கு 7.. மாஸ்டர் க்ளாஸ் சதமடித்த வில்லியம்சன்.. தெ.ஆ அணியை வீழ்த்தி.. ஸ்மித்தை முந்தி உலக சாதனை
இந்நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்றும் தமிழக வீரர் அஸ்வின் பேட்டிங் செய்யும்போது ஆடுகளத்தின் நடுப்பகுதியில் ஓடியதால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அம்பயரிடம் புகார் அளித்தார். அதனை சோதித்த அம்பயர் அஷ்வின் செய்த தவறை சுட்டிக்காட்டி அவரது இந்த செயல் ஆடுகளத்தை சேதப்படுத்தும் விதமாக அமைந்ததாக கூறி இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்களை வழங்குவதாக தனது முடிவை அறிவித்திருந்தார்.