7க்கு 7.. மாஸ்டர் க்ளாஸ் சதமடித்த வில்லியம்சன்.. தெ.ஆ அணியை வீழ்த்தி.. ஸ்மித்தை முந்தி உலக சாதனை

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரில் நெய்ல் பிராண்ட் தலைமையிலான இரண்டாவது தர இளம் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. குறிப்பாக எஸ்ஏ டி20 தொடரில் ரபாடா போன்ற முதன்மை வீரர்கள் விளையாடச் சென்றதால் இத்தொடரின் முதல் போட்டியில் 6 அறிமுக வீரர்களுடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது.

அதனால் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை வலுவான நியூசிலாந்து தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஹமில்டன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரூவான் சேவ் ஸ்வார்ட் 64 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக வில்லியம் ஓரௌர்க்கே 4 விக்கெட்களை எடுத்தார்.

- Advertisement -

வில்லியம்சன் சாதனை:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்தை இத்தொடரில் முதல் முறையாக சிறப்பாக பந்து வீசிய தென்னாபிரிக்க 211 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 43, டாம் லாதம் 40 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக டீன் பீட் 5 விக்கெட்டுகளை எடுத்தார் அதன் பின் 31 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா கடுமையாக போராடியும் 235 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் சதமடித்து 110, கீகன் பீட்டர்சன் 43 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக வில்லியம் ஓரௌரக்கே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 267 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல மற்றொரு துவக்க வீரர் டாம் லாதமும் 30 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

அவருக்கு கை கொடுக்க முயற்சித்த ரச்சின் ரவீந்திரா 20 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தென்னாபிரிக்க பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய வில்லியம்சன் சதமடித்து 12 பவுண்டரி 2 சிக்சருடன் 133* ரன்கள் குவித்தார். அவருடன் மிடில் ஆர்டரில் வில் எங் 60 ரன்கள் எடுத்தார். அதனால் 269/3 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை எளிதாக தோற்கடித்தது.

இதையும் படிங்க: எல்லாம் அவரோட ராசி.. சர்பராஸ் கான் ரன் அவுட்டாக கும்ப்ளே தான் காரணமா? – என்னப்பா இதெல்லாம்?

அதன் காரணமாக டேன் பீட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் எடுத்தும் தென்னாபிரிக்கா வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றியால் 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்ற நியூசிலாந்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. அதை விட கடைசியாக விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்கள் அடித்துள்ள கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 32 சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கேன் வில்லியம்சன் : 172 இன்னிங்ஸ்*
2. ஸ்டீவ் ஸ்மித் : 172 இன்னிங்ஸ்
3. ரிக்கி பாண்டிங் : 176 இன்னிங்ஸ்

Advertisement