இவங்களால எனக்கு ஹார்ட் அட்டேக் வந்துரும் போல – பதறிப்போன அம்பயர் – நடந்தது என்ன?

Erasmus
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியானது தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த 3ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியானது நேற்றுடன் மூன்று நாட்களை நிறைவு செய்துள்ளது. மீதமுள்ள இரண்டு நாட்களில் எந்த அணி வெற்றி பெறும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. முதல் மூன்று நாள் ஆட்டம் நடைபெற்று முடிந்த வேளையில் தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை. மேலும் அவர்கள் கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் உள்ளன.

Markram

- Advertisement -

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கையே தற்போது இந்த போட்டியில் ஓங்கியுள்ளது. ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் நான்காம் நாளான இன்று விரைவாக விக்கெட்டுகளை அடுத்தடுத்து தொடர்ச்சியாக வீழ்த்தியே ஆக வேண்டும். அப்படி விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்றால் நிச்சயம் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதியுள்ளதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

இந்நிலையில் இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக வீரர்களுக்கு இடையேயான மோதல், அம்பயரின் கவனக்குறைவு என முதல் நாளில் இருந்தே ஆட்டம் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பணியாற்றி வரும் அம்பயர் எராஸ்மஸ் இந்திய அணி வீரர்கள் குறித்து நகைச்சுவையாக ஒரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

erasmus 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவரை வீசும் போதும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வரும்படி செய்கின்றனர். ஏனெனில் தொடர்ச்சியாக வெற்றிக்காக விடாப்பிடியாக போராடும் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு ஓவரின் போதும் என்னிடம் அப்பீல் செய்கின்றனர். இதன் காரணமாக முடிவு எடுப்பதில் எனக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. அந்த வகையில் இந்திய வீரர்கள் தங்களது அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : உனக்கு அறிவு எங்க போச்சி. வாயை மூடிட்டு நில்லு – தெ.ஆ வீரரை கடுமையாக திட்டிய பண்ட் – நடந்தது என்ன?

இவர்களின் உத்வேகமான செயல்பாட்டால் என்னால் சற்றும் நிதானமாக இருக்க முடியவில்லை. எந்நேரமும் உன்னிப்பாகப் போட்டியை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்று ஜாலியாக சில கருத்துக்களை நேற்றைய ஆட்ட நேர முடிவில் அம்பயர் எராஸ்மஸ் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement