உனக்கு அறிவு எங்க போச்சி. வாயை மூடிட்டு நில்லு – தெ.ஆ வீரரை கடுமையாக திட்டிய பண்ட் – நடந்தது என்ன?

pant 1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே எப்போது டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்றாலும் வீரர்களுக்கு இடையே வார்த்தை மோதல் அதிக அளவில் நடைபெறும். அதன் காரணமாக அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் மிக சுவாரஸ்யமாக அமையும். அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெறும் போட்டிகளில் மிக சுவாரஸ்யமாக விளையாடி வருகிறது. ஏனெனில் இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்தே இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்க வீரர்கள் உடன் நேரடியாக மோதி வருகின்றனர். அதுமட்டுமின்றி அம்பயரின் தவறான முடிவுகள் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர் ரிஷப் பண்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் வேண்டர்டுசென் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரசல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தங்களது முதல் இன்னிங்சை தென் ஆப்பிரிக்க அணி விளையாடிக் கொண்டிருந்தபோது ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் வேண்டர்டுசென் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

ஆனால் அவரது அந்த விக்கெட் சரியானது கிடையாது என்று சற்று தாமதமாகவே தெரியவந்தது. பந்து கீழே பட்டு தான் கீப்பர் பிடித்திருந்தார் என்பது நீண்ட நேரம் கழித்து தெரியவரவே அவரால் மீண்டும் பேட்டிங் செய்ய வரமுடியவில்லை அவர் அவுட் என்று அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேண்டர்டுசென் இரண்டாவது இன்னிங்சில் போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வருகையில் அவரிடம் வம்பிழுத்தார்.

“நீ விக்கெட் கீப்பர் தானே”, “உனக்கு பந்து கீழே பட்டு பிடித்தது நன்றாகத் தெரிந்திருக்கும்”. ஆனால் பொய் சொல்லி விட்டாய் என்று ரிஷப் பண்ட் வார்த்தைகளால் துளைத்தார். இதனால் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் தனது கவனத்தை சிதற விட்டார். அதுமட்டுமின்றி நேராகவே வேண்டர்டுசெனை நோக்கி உனக்கு பாதி கூட அறிவு இல்லையா? வாயை மூடிக்கிட்டு நில்லு என்று தனது காட்டமான பதில் அளித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : கும்ப்ளேவிற்கு பிறகு ஜோகனஸ்பர்க் மைதானத்தில் சாதனை நிகழ்த்திய அஷ்வின் – என்ன தெறியுமா?

இது குறித்த உரையாடல் தற்போது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த இரண்டாவது இன்னிங்சில் சற்று நிதானித்து விளையாடி இந்திய அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement