- Advertisement -
உலக கிரிக்கெட்

கிரிக்கெட் பந்து தாக்கி ஒரு மாதம் கழித்து உயிரிழந்த அம்பயர் பற்றி தெரியுமா ? – சுவாரஸ்ய தகவல் இதோ

கிரிக்கெட் அம்பயர் ஒருவர் பந்து பட்டு ஒரு மாதம் கழித்து இறந்த சம்பவத்தை பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சுவாரசியமான நிகழ்வு குறித்து பார்ப்போம் வாருங்கள்.

பிபிசி ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட்டின் படி ஜான் வில்லியம்ஸ் என்ற அம்பயர் யுகேவில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான கவுன்டி போட்டியின்போது பந்து தாக்கப்பட்டு ஜூலை 13ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கார்டிப் நகரில் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

அதன்பிறகு அவர் இன்னும் ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து கவுண்டி அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ஜான் வில்லியம்ஸ் அம்பயரின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எங்களுக்கு அது வருத்தத்தையும் அளித்துள்ளது. அவரது குடும்பத்திற்கும் அவர்களது உறவினர்களுக்கும் இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். எங்களால் அவரது இழப்பை நினைத்து பார்க்கக் கூட முடியவில்லை.

பந்து தாக்கி அவர் கோமா நிலையை அடைந்ததும் சில நாட்களில் சரியாகி விடுவார் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உயிர் பிரிந்தது எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு ஜென்டில்மேன். உண்மையான கிரிக்கெட்டை சரியான கோணத்தில் பார்த்த ஒரு சிறப்பான அம்பயர் என்று தங்களது ஆறுதலை ஜான் வில்லியம்ஸ்க்காக அந்த கவுண்டி அணி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by