ரிஷப் பண்ட் க்ளவுஸால் வந்த சர்ச்சை. அம்பயர் விராட் கோலி உரையாடல் – மைதானத்தில் நடந்தது என்ன ?

Pant

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 25ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 432 ரன்களை குவித்தது.

pant 2

இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். இந்த போட்டியில் புதிதாக களமிறங்கிய டேவிட் மலான் 70 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின்போது டேவிட் மலான் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பிடித்து இருந்தார். அவர் பிடித்த கேட்ச் தான் இந்த போட்டியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கேட்ச்க்குப் பிறகு ரீபிளேவில் பண்ட் வழக்கத்திற்கு மாறாக தனது கீப்பிங் கிளவுசில் நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல் ஆகியவற்றை சேர்த்து டேப் அடித்திருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக அதனை கவனித்த களத்தில் இருந்த நடுவர்கள் உடனடியாக கேப்டன் கோலியிடம் சென்று விக்கெட் கீப்பர் பண்ட் கிளவுஸில் இருக்கும் டேப்பை உடனடியாக அகற்ற கூறினர்.

pant 1

கேப்டன் விராட் கோலியும் அம்பயர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு ரிஷப் பண்டின் கிளவுஸில் இருந்த டேப்பை அகற்றி விட்டார். ஏற்கனவே இதே போன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது கிளவுசை ஒட்டி இருந்த போதும் இதே போன்ற நிகழ்வு ஏற்பட்டு டேப்பை அகற்றியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது பண்ட் கேட்ச் பிடிக்க ஏதுவாக இருக்கும் என்ற காரணத்திற்காக டேப் ஒட்டியிருந்தது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. மேலும் இதுகுறித்து வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement