நான் என்ன தப்பு பண்ணேன். என்னை டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட வைக்குறீங்க – புலம்பிய இந்திய வீரர்

Umesh-4
- Advertisement -

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் என இந்திய அணியின் தரமான பாஸ்ட் பவுலர்களை கொண்டிருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி பாஸ்ட் பவுலர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் நவ்தீப் சைனி மற்றும் தீபக் சாஹர் போன்ற இளம் வீரர்களும் தற்போது வந்துள்ளதால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடி வருகின்றனர். இவர்களில் பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவர் மட்டும்தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுகின்றனர். அவர்கள் இருவர் மட்டுமே மூன்று பார்மட்டில் ஆடுபவர்களாக இருக்கின்றனர். இவர்களுடன் சைனி, தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து வடிவத்திலும் சிறப்பாக செயல்பட்டுவரும் உமேஷ் யாதவுக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியிலும் உமேஷ் யாதவ ஆடினார். ஆனால் அதன்பின்னர் அவர் அணியில் இடம் பெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

Umesh

தற்போது வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வரும் யாதவ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டு வர கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இடம் கிடைக்காதது குறித்து மிகவும் வருத்தத்துடன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : மைதானத்துக்கு வெளியே உட்கார வேண்டும் என்று யார் விரும்புவார்கள்.

umesh

யாருமே விரும்பமாட்டார்கள். நானும் ஒரு மனிதன் தானே நான் உண்மையாக கடுமையாக உழைத்து வருகிறேன். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்றும் உமேஷ் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement