டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இவரது விக்கெட்டை எடுப்பது தான் முதல் இலக்கு – உமேஷ் யாதவ் வெளிப்படை

Umesh
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியானது இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளதால் இரு அணிகளும் எவ்வாறு மோதிக்கொள்ளும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

INDvsNZ

- Advertisement -

முதல் முறையாக நடத்தப்படும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதனால் இந்த போட்டி நிச்சயம் சுவாரசியமாக அமையும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும், எந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதேபோன்று இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் சில வீரர்களும் தங்களது கருத்துக்களை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து கூறுகையில் :

williamson

கேன் வில்லியம்சன் நிச்சயம் இந்திய அணிக்கு சவாலாக இந்த போட்டியில் இருப்பார். அவரை சமாளிக்க எங்களிடம் சில திட்டங்கள் இருந்தாலும் அவரிடம் பலவீனங்கள் என்பது மிகக் குறைவாகவே உள்ளது. அதனால் அவரின் குறையைக் கண்டுபிடித்து அவரை அவுட் ஆக்குவது என்பது எளிதல்ல. நிச்சயம் வில்லியம்சன் விக்கெட்டை விரைவாக வீழ்த்த முயற்சி செய்வோம்.

Umesh

பந்துவீச்சிலும் நியூசிலாந்து அணி சம பலத்துடன் இருப்பதால் நிச்சயம் இந்த போட்டி கடுமையாக இருக்கும் என்று உமேஷ் யாதவ் கூறினார். அது மட்டுமின்றி இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்ற போராடும் எனவும் உமேஷ் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement