நான் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீச கோலி செய்த இந்த விடயமே காரணம் – உமேஷ் யாதவ் பேட்டி

Umesh
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Umesh 3

- Advertisement -

அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நான்காம் நாளான இன்று மேலும் ஒரு ரன் சேர்த்து 133 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்த தொடர் குறித்து கூறியதாவது : இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. மேலும் பந்துவீச்சாளராக எங்களின் செயல்பாடு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணி வீரர்களின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். அத்துடன் இந்தத் தொடரில் நான் இடம்பிடித்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் போது சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைத்தேன்.

Umesh-4

இந்த போட்டியின்போது கோலி என்னிடம் வந்து உங்கள் திறமை எனக்கு தெரியும் நீங்கள் எந்த அழுத்தமும் இன்றி சுதந்திரமாக பந்துவீசுங்கள் என்று கூறினார். கோலியின் இந்த வார்த்தை மற்றும் சுதந்திரமே என்னை இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட வைத்தது அணியின் கேப்டனாக கோலி வீரர்களின் மனநிலையை புரிந்து வைத்துள்ளார் என்று உமேஷ் யாதவ் கூறினார்.

Advertisement