
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் உமேஷ் யாதவ் ஒரு கட்டத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார். குறிப்பாக தோனி தலைமையில் 2015 உலகக் கோப்பையில் அசத்திய அவர் இந்தியாவுக்காக 57 டெஸ்ட், 75 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 288 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் கடைசியாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடினர்.
சமீப காலங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் நன்றாக பவுலிங் செய்தார். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அவர் சுமாராகவே பவுலிங் செய்தார். அதன் காரணமாக 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. தற்போது 37 வயதை கடந்து விட்டதால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் 15 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடியும் இம்முறை தம்மை எந்த அணியும் வாங்காதது ஏமாற்றமளிப்பதாக உமேஷ் யாதவ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருட ஐபிஎல் தொடரில் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். 15 வருடங்களாக விளையாடிய எனக்கு அது ஆச்சரியமாக இருக்கிறது”
“நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? ஆம் அதற்காக நான் சோகமாக உணர்கிறேன். சுமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய நீங்கள் தேர்வு செய்யப்படாமல் போனால் அப்படித்தான் இருக்கும். இருப்பினும் அது ஐபிஎல் அணிகளின் திட்டங்களைப் பொறுத்தது. என்னுடைய பெயர் ஏலத்தின் கடைசி நேரத்தில் தான் வந்ததால் ஐபிஎல் அணிகளிடம் போதுமான பணம் இல்லாமல் இருந்திருக்கலாம்”
“இறுதியில் ஏலத்தில் வாங்கப்படாததால் நான் விரக்தியும் தொல்லையையும் சந்தித்தேன். இருப்பினும் பரவாயில்லை. நான் எந்த முடிவையும் மாற்ற முடியாது. காயத்துக்காக நான் காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். என்னால் முடியும் என்று உணரும் வரை 140 கிலோ மீட்டர் வேகத்தில் பவுலிங் செல்வேன்”
இதையும் படிங்க: நீங்க ப்ராட்மேன், ரிச்சர்ட்ஸ், கிரிக்கெட்டை விட பெருசில்ல.. யுவி மாதிரி இதை செய்றதுல என்ன தயக்கம்.. யோக்ராஜ் அறிவுரை
“என்னால் முடியாத போது கிரிக்கெட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் எனக்கு நானே விலகிக் கொள்வேன்” என்று வருத்தத்துடன் பேசினார். மொத்தத்தில் இந்திய அணியில் பும்ரா வருவதற்கு முன்பு வரை உமேஷ் யாதவ் முதன்மை பவுலராக இருந்து வந்தார். ஆனால் தற்போது பும்ரா, சிராஜ் வந்து விட்டதால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.