இப்படியா ஏமாறுவீங்க? நண்பரிடம் பல லட்சத்தை ஏமாந்த உமேஷ் யாதவ் – என்ன நடந்தது? விவரம் இதோ

Umesh-Yadav
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 54 டெஸ்ட் போட்டிகள், 75 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டில் விளையாடியது மட்டும் இன்றி ஐபிஎல் தொடரிலும் அவர் 133 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Umesh-Yadav

- Advertisement -

சமீப காலமாகவே ஒருநாள் மற்றும் டி20 அணியில் உமேஷ் யாதவுக்கு இடம் கிடைக்காமல் இருந்து வந்தாலும் டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் உமேஷ் யாதவ் தனது நண்பரை நம்பி ஏமாந்த ஒரு விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை பூர்வீகமாகக் கொண்ட உமேஷ் யாதவ் தனது நண்பரான சைலேஷ் தாக்கரே என்பவரை தன்னுடைய மேலாளராக வைத்திருந்தார். உமேஷ் யாதவின் வங்கி கணக்கு, வருமான வரி மற்றும் நிதிசார் செயல்பாடுகள் அனைத்தையும் சைலேஷ் தாக்கரே தான் இதுனால் வரை கவனித்து வந்தார்.

Umesh Yadav

தனது நண்பர் தான் என்கிற நம்பிக்கையில் தற்போது அவரிடம் உமேஷ் யாதவ் ஏமாந்த விடயம் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில் நாக்பூரில் சொந்தமாக மனை வாங்க விரும்பிய உமேஷ் யாதவ் அதுகுறித்து சைலேஷிடம் தெரிவித்து 44 லட்ச ரூபாய் தொகையை அவரது வங்கிக் கணக்கிற்கு டெபாசிட் செய்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அந்த குறிப்பிட்ட நிலத்தை வாங்கிய சைலேஷ் அவரது பெயரில் அந்த சொத்தினை பதிந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த உமேஷ் யாதவ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மீண்டும் சைலேஷிடம் அந்த சொத்துக்களை தன் பேரில் மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : ரோஹித் கிட்ட இருக்குற இந்த மறதி எவ்ளோ பெருசு தெரியுமா? விராட் கோலி பகிர்ந்த சுவாரசியம் – வைரலாகும் பதிவு

ஆனால் பணத்தையும் திருப்பிக் கொடுக்க முடியாது, சொத்தையும் மாற்றி எழுத முடியாது என்று சைலேஷ் மறுத்துவிட்டார். இதன் காரணமாக தற்போது உமேஷ் யாதவ் போலீசாரின் உதவியை நாடியுள்ளார். இப்படி நண்பரை நம்பி உமேஷ் யாதவ் ஏமாந்த விடயம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement