பேட்டிங்கில் சச்சின் சாதனையை சமன்செய்த உமேஷ் யாதவ். என்ன நம்ப முடியலையா ? – இதைப்பாருங்க புரியும்

Umesh-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

இந்தப்போட்டியில் ஜடேஜா ஆட்டமிழந்த பிறகு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் பேட்டி களமிறங்கினார். களமிறங்கியது முதல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதில் 5 சதங்கள் அடங்கும் இவரது அதிரடி மூலம் இந்திய அணி 497 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இந்த போட்டியில் உமேஷ் யாதவ் பேட்டிங்கில் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நம்ப முடியவில்லை என்றாலும் அதுவே உண்மை. அந்த சாதனை யாதெனில் களமிறங்கிய முதல் இரண்டு பந்துகளையும் உமேஷ் யாதவ் நேற்று சிக்ஸர் அடித்தார் இதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் சச்சின் மட்டுமே இந்திய அணி சார்பில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களமிறங்கிய முதல் 2 பந்துகளில் சிக்சர் அடித்து சாதனையை வைத்து இருந்தார்.

Umesh

அதன் பிறகு இந்திய அணி பேட்ஸ்மன் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடிப்பது இதுவே முதல்முறை. எனவே இந்த அரியவகை சாதனையில் சச்சினை உமேஷ் யாதவ் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Advertisement