உமேஷ் யாதவ் அதிரடியாக 5 சிக்ஸர்களை அடிக்க கோலிதான் காரணம் – என்னப்பா சொல்றீங்க

Umesh-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

இந்தப்போட்டியில் ஜடேஜா ஆட்டமிழந்த பிறகு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் பேட்டி களமிறங்கினார். களமிறங்கியது முதல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதில் 5 சதங்கள் அடங்கும் இவரது அதிரடி மூலம் இந்திய அணி 497 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவ் அதிரடியாக ரன்களை குவிக்க கோலியே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜடேஜா ஆட்டம் இழந்ததும் பின் செல்லும் வீரர்கள் அனைவரும் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும் என்றும் மேலும் சில ஓவர்கள் தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய வைத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று கோலி கூறியிருந்தாராம்.

இதனைக்கேட்ட உமேஷ் யாதவ் களத்திற்குச் சென்ற உடனேயே அடிக்க வேண்டும் என்று தீர்மானித்து முதல் 2 பந்துகளில் சிக்சர் அடித்தார் மேலும் தன் எதிர்கொள்ள இருக்கும் அனைத்து பந்துகளை அடித்து நொறுக்க திட்டமிட்டு 5 சிக்சர்களை அடித்ததாக உமேஷ் யாதவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement