டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்த உமேஷ் யாதவ் – நம்ப முடியலையா அப்போ இதை படிங்க

Umesh-Yadav-and-Kohli
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனைத்தொடர்ந்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் துவங்கியது.

Nathan Lyon

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று ரோகித் சர்மா அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள், சுப்மன் கில் 21 ரன்களையும், கே.எஸ் பரத் மற்றும் உமேஷ் யாதவ் தலா 17 ரன்களையும் அடித்தனர். அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Umesh Yadav

இந்நிலையில் உமேஷ் யாதவ் இன்றைய போட்டியில் அடித்த 17 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் முக்கியமான சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் 13 பந்துகளை சந்தித்த உமேஷ் யாதவ் 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 17 ரன்களை எடுத்தார். அதில் குறிப்பிட வேண்டிய சாதனை யாதெனில் :

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விராட் கோலி 8,217 ரன்களை விளாசி இருந்தாலும் அதில் 24 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் தனது 55 டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் தற்போது இந்த போட்டியில் அடித்த இரண்டு சிக்ஸர்கள் மூலம் 24 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : முகமது சிராஜை வம்பிற்கு இழுத்த ஆஸி வீரர் மார்னஸ் லாபுஷேன். அடுத்த ஓவரிலேயே ஜடேஜா கொடுத்த தக்க பதிலடி

இதன்மூலம் இந்திய வீரர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் என்ற பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்த உமேஷ் யாதவ் 17-வது இடத்தை பகிர்ந்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார். இந்த போட்டியில் உமேஷ் யாதவ் அடித்த இரண்டு சிக்ஸர்களையும் கண்ட விராட் கோலி பெவிலியனில் இருந்து துள்ளி குதித்தது கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement