முகமது சிராஜை வம்பிற்கு இழுத்த ஆஸி வீரர் மார்னஸ் லாபுஷேன். அடுத்த ஓவரிலேயே ஜடேஜா கொடுத்த தக்க பதிலடி

Siraj-and-Marnus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று (மார்ச் 1-ஆம் தேதி) இந்தூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 33.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் 109 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்த தொடரில் முதல் முறையாக தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் வார்த்தையால் வசை பாடினார். இதனால் போட்டியில் அனல் பறந்தது.

பின்னர் அடுத்த ஓவரிலேயே ஜடேஜா அவரை ஆட்டம் இழக்க வைத்து வெளியேறினார். இதுகுறித்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியின் 34 ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ் மார்னஸ் லாபுஷேனுக்கு எதிராக அந்த ஓவரின் மூன்றாவது பந்தினை வீசினார்.

- Advertisement -

அப்போது பேட்டிங் செய்த லாபுஷேன் அவரது பந்தை அடிக்க நினைத்தார். ஆனால் பந்து இன்சைடு எட்ஜாகி ஸ்டம்பின் அருகில் சென்றது. அப்போது எதிர்புறம் ரன் ஓடி வருகையில் லாபுஷேன் முகமது சிராஜை பார்த்து ஏதோ ஆவேசமான வார்த்தைகளை உதிர்த்தார். உடனே சிராஜூம் அவருக்கு பதில் கொடுத்துவிட்டு திரும்பிவிட்டார்.

இதையும் படிங்க : வீடியோ : உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை தொடர்ந்து பெட்டி பாம்பாக அடக்கும் ஜடேஜா – கபில் தேவுக்கு பின் அபார சாதனை

இப்படி லாபுஷேன் வார்த்தைகளால் சிராஜை வெறுப்பேற்றிய அடுத்த ஓவரிலேயே அதாவது 35-ஆவது ஓவரின் மூன்றாவது பந்திலேயே சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா அவரை கிளீன் போல்ட் ஆக்கினார். இதன் மூலம் இந்திய வீரரை வம்பிழுக்க நினைத்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேனுக்கு அடுத்த ஓவரிலேயே இந்திய அணி பதிலடி கொடுத்ததாக இந்த இரண்டு வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement