கம்பேக்னா இப்படி இருக்கனும். ஒரே போட்டியில் வரலாற்றில் இடம்பெற்ற உமேஷ் யாதவ் – விவரம் இதோ

Umesh
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் ஒரு மைதானத்தில் நேற்று செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ஆனது 191 ரன்களை குவிக்க அடுத்ததாக தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

indvseng

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக ஷர்துல் தாகூரும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இங்கிலாந்து தொடருக்கான அணியில் தேர்வாகி இருந்த உமேஷ் யாதவுக்கு முதல் மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த நான்காவது போட்டிக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு வாய்ப்புக் கிடைத்ததை அப்படியே சரியாக பயன்படுத்திய உமேஷ் யாதவ் தனது அனுபவத்தை இந்த போட்டியின் மூலம் வெளிக் காட்டினார். இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களான டேவிட் மலான், ஜோ ரூட், ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்திய உமேஷ் யாதவ் முதல் இன்னிங்சில் இதுவரை 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

umesh 1

இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக ஒரு புதிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனையை யாதெனில் இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். மேலும் 150 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜாஹீர்கானுடன் இணைந்து அவர் நான்காவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

umesh 2

தற்போது 49 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் உமேஷ் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக வேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக கபில்தேவ் திகழ்கிறார். 39 டெஸ்ட் போட்டியில் கபில்தேவ் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஜவகல் ஸ்ரீநாத் 40 போட்டிகளிலும், முகமது ஷமி 42 போட்டிகளிலும் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement