வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே போட்டி இருப்பது நல்லதுதான் – உமேஷ் யாதவ் பேட்டி

Umesh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Umesh-Yadav

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணியின் இந்த டெஸ்ட் தொடர் செயல்பாடு குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய உள்ளனர். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தப் போட்டியானது இந்திய அணிக்கு நல்லதுதான். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரை முந்தி தங்களது திறமையை நிரூபிக்க தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்த முயல்வார்கள் எனவே ஒவ்வொருவரும் தங்களுடைய இடத்தை தக்கவைக்க சிறப்பாக பந்துவீசுவோம். இந்த போட்டி இந்திய அணிக்கு ஆரோக்கியமான ஒன்றுதான்.

umaesh yadhav

இதன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு வலிமை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று உமேஷ் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டு உமேஷ் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement