இந்தியா ஸ்ட்ராங்கான டீம் தான்.. ஆனா டி20யில் இதை செஞ்சா பாகிஸ்தான் ஜெய்க்கலாம்.. உமர் குல் பேட்டி

Umar Gul
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வதற்கு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அமீரகம், ஓமன் ஆகிய ஆசிய அணிகள் தயாராகியுள்ளன.

அந்த அணியில் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இம்முறை கூடுதலாகவே இருக்கிறது. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பாக இந்திய சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான்:

அதற்கு பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகள் எடுத்து பதிலடி கொடுத்தது. எனவே இம்முறை ஆசியக் கோப்பையில் வெற்றி கண்டு அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற டி20 தொடர்களை சல்மான் ஆகா தலைமையில் பாகிஸ்தான் வென்றது.

எனவே பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரை கழற்றி விட்டு புத்துயிர் பெற்றுள்ள பாகிஸ்தான் இம்முறை இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் வெறியுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா மிகவும் வலுவாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் உமர் குல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் வெல்லும்:

ஆனால் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் வெளிப்படுத்தும் ஒரு நல்ல செயல்பாடு வெற்றியை மாற்றக்கூடியது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் உமர் குல் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாம் பாகிஸ்தான் அணியை ஆதரிக்க வேண்டும். இந்திய அணி வலுவாக இருப்பது போல் தெரிகிறது”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா? – வெளியான அப்டேட்

“ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பேட்டிங் அல்லது பவுலிங் செயல்பாடு போட்டியைத் தலைகீழாக மாற்ற வல்லது. பாகிஸ்தான் வென்ற பெரும்பாலான முக்கிய தொடர்களின் வெற்றிகள் பவுலர்களால் வந்தது. ரசிகர்கள் கண்டிப்பாக முகமது ரிஸ்வான், பாபர் அசாம், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திரங்களை இத்தொடரில் மிஸ் செய்வார்கள்” என்று கூறினார்.

Advertisement