பழி வாங்க மாட்டோம்.. ஆனா அதை மட்டும் செய்றது சத்தியம்.. ஃபைனல் பற்றி இந்திய கேப்டன் பேட்டி

Uday Saharan
- Advertisement -

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர்-19 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் நடப்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது. வருங்கால கிரிக்கெட்டுக்கு தேவையான தரமான வீரர்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் இந்த தொடரில் உதய் சஹரன் தலைமையிலான இந்திய அணி தங்களுடைய லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் தோல்வியை சந்திக்காமல் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதை தொடர்ந்து நடைபெற்ற செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா செமி ஃபைனலில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஃபைனலுக்கு வந்துள்ளது.

- Advertisement -

சத்தியம் செய்வோம்:
இதை தொடர்ந்து பிப்ரவரி பதினொன்றாம் தேதி நடைபெறும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து 6வது முறையாக அண்டர்-19 கோப்பையை இந்தியா வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதை விட சீனியர் கிரிக்கெட்டில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் தங்களுக்கு மறக்க முடியாத தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவை இப்போட்டியில் வீழ்த்தி தக்க பதிலடி கொடுத்து இளம் இந்திய படை பழி தீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் சீனியர் கிரிக்கெட்டில் சந்தித்த தோல்விகளுக்காக ஆஸ்திரேலியாவை நாங்கள் பழிவாங்கப் போவதில்லை என அண்டர்-19 இந்திய அணி கேப்டன் உதய் சஹரன் தெரிவித்துள்ளார். அதே சமயம் முகமது கைப், விராட் கோலி ஆகியோரின் தலைமையில் வென்றது போல இம்முறை தன்னுடைய தலைமையில் அண்டர்-19 கோப்பையை வென்று இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று உறுதியாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பழி வாங்குவோம் என்பது போல் நான் எதுவும் நினைக்கவில்லை. மாறாக போட்டியில் கவனம் செலுத்தும் நாங்கள் எங்களுடைய சிறந்தவற்றை கொடுக்க வேண்டும். இங்கே ஒவ்வொரு போட்டியும் முக்கியம். ஏனெனில் உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் நல்ல அணிகள். எனவே இந்த தொடரை வெல்வது எங்களுடைய கனவாகும். பொதுவாக அனைவருமே ஒரே ஒரு அண்டர்-19 உலக கோப்பையை மட்டுமே தங்களுடைய வாழ்வில் சந்திப்பார்கள்”

இதையும் படிங்க: அவரு விளையாடறத பாத்தா நமக்கே டெஸ்ட் மேட்ச் மேல ஆசை வந்துரும்.. இந்திய வீரர் குறித்து – ஆகாஷ் சோப்ரா கருத்து

“அதில் கோப்பையை வென்று வரலாற்றில் எங்களுடைய பெயரை பொறிக்க விரும்புகிறோம். அதற்கு எங்களுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க விரும்புகிறோம். எனவே நம் நாட்டில் உள்ள அனைவரிடமும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதை பயன்படுத்தி எங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் கொடுத்து கோப்பையை நாட்டுக்கு கொண்டு வருவோம் என்று அவர்களுக்கு நாங்கள் சத்தியம் செய்கிறோம்” என்று கூறினார்.

Advertisement