அவரு விளையாடறத பாத்தா நமக்கே டெஸ்ட் மேட்ச் மேல ஆசை வந்துரும்.. இந்திய வீரர் குறித்து – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதுமே ஸ்பின்னர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் நிறையவே இருந்து வருகிறது. இந்திய அணியை தாண்டி இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் ஒருபுறம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் ஸ்பின்னர்கள் அற்புதமாக செயல்பட அதே வேளையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மிகச் சிறப்பான பந்துகளை வீசி இங்கிலாந்து வீரர்களின் ஸ்டம்புகளை பறக்க விட்டு வருகிறார். அவரது பந்துவீச்சு இந்த தொடரில் மிகப் பிரமாதமாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதோடு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் முன்னணி வீரர்கள் என பலரும் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக எப்படி விளையாடுவது என்ற குழப்பமே ஏற்படுவதாகும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இது குறித்து பேசியிருந்த மெக்கல்லம் கூறுகையில் : பும்ராவின் ரிலீஸ் பாயிண்ட்களை கட் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் அவருக்கு எதிராக போராடும் பேட்ஸ்மேன்கள் எங்களிடம் உள்ளனர் என தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை பார்க்கும் போது நமக்கே டெஸ்ட் போட்டிகளை பார்க்க ஆசை வரும். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். முதுகில் காயம் அடைந்து தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருந்தாலும் அவர் பந்துவீசும் விதம் அற்புதமாக இருக்கிறது.

இதையும் படிங்க : மறுபடியும் ஆஸ்திரேலியாவா? ரசிகர்கள் கவலை.. இந்தியா பழி தீர்க்குமா? முந்தைய 2 ஃபைனலின் வரலாறு

பும்ரா ஒவ்வொரு முறை பந்தை வீசும் போதும் விக்கெட் எடுக்கும் வகையிலேயே இருந்து வருவதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் பும்ரா விளையாடும் போது டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க நமக்கே காதல் வர வைக்கிறார். உலகில் நம்பர் 1 பவுலரான அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement