மறுபடியும் ஆஸ்திரேலியாவா? ரசிகர்கள் கவலை.. இந்தியா பழி தீர்க்குமா? முந்தைய 2 ஃபைனலின் வரலாறு

IND vs AUS U19
- Advertisement -

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர்-19 உலகக் கோப்பையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்க அணிகளை தோற்கடித்தது. அதன் பின் சூப்பர் 6 சுற்றில் நியூசிலாந்து மற்றும் நேபாள் அணிகளை வீழ்த்திய இந்தியா அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து முதல் அணியாக தகுதி பெற்றது.

மறுபுறம் இந்தியா போலவே லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வெறும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. இதன் வாயிலாக அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற இந்தியாவின் உலக சாதனையையும் ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:
இதற்கு முன் இந்தியா கடந்த 2012 உலகக் கோப்பை செமி ஃபைனலில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த முதல் கிரிக்கெட் அணியாக ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து வரும் பிப்ரவரி 11ஆம் தேதி பெனோனி நகரில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதை நினைத்து இந்திய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர் என்றே சொல்லலாம்.

ஏனெனில் சீனியர் கிரிக்கெட்டில் 2003 உலகக்கோப்பை ஃபைனலில் கங்குலி தலைமையிலான இந்திய அணியை ஆஸ்திரேலியா நொறுக்கியதை 90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அதை விட கடந்த வருடம் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

- Advertisement -

அந்த வரிசையில் தற்போது தொடர்ந்து 3வது முறையாக ஐசிசி ஃபைனலில் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை வந்துள்ளதால் மறுபடியும் ஆஸ்திரேலியாவா? என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஆனால் இதற்கு முன் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து உன்முக்த் சந்த் தலைமையிலான இந்தியா கோப்பையை வென்றது.

அதே போல நியூசிலாந்தில் நடைபெற்ற 2018 அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா பிரிதிவி ஷா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வரிசையில் தற்போது 3வது முறையாக ஆஸ்திரேலியாவை அண்டர்-19 ஃபைனலில் இந்தியா எதிர்கொள்கிறது. இம்முறை உதய் சஹரன் தலைமையிலான இளம் இந்திய அணி இதுவரை தோற்காமல் ஃபைனலுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: வெறும் 1 விக்கெட்.. சிறிய தவறால் நொறுங்கிய பாகிஸ்தான்.. இந்தியாவுடன் மோத ஆஸி தகுதி பெற்றது எப்படி?

எனவே பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இளம் இந்திய படை ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சீனியர் கிரிக்கெட்டில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் சந்தித்த பதிலடி கொடுத்து பழி தீர்த்து வரலாறு படைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement