163 ரன்ஸ் சேசிங்.. வங்கதேசத்தை மீண்டும் வீழ்த்திய அமீரக அணி.. புதிய வரலாற்றை எழுதி சாதனை வெற்றி

UAE vs BAN 22
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அமீரகம் தொடரை சமன் செய்தது. அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியைப் பெற்று அமீரகம் வரலாறு காணாத சாதனை படைத்தது.

இந்த சூழ்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மே 21ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் போராடி 162-9 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 40, ஜாகிர் அலி 41, ஹசன் மஹ்முத் 26*, சோரிபுல் இஸ்லாம் 16* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

அமீரகம் வெற்றி:

அமீரக அணிக்கு அதிகபட்சமாக ஹைதர் அலி 3, சகிர் கான் 2, மடியுல்லா கான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய அமீரகம் அணிக்கு கேப்டன் முகமது வாசிம் 9, முகமத் சோஹைப் 29 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த அலிசன் ஃசரபு அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்தார். எதிர்புறம் ராகுல் சோப்ரா 13 ரன்னில் அவுட்டானார்.

இருப்பினும் ஆசிப் கான் அதிரடியாக விளையாடி 41* (26) ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத அலிசன் 68* (47) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.1 ஓவரில் 166/3 ரன்களை எடுத்த அமீரகம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் காரணமாக 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரில் அமீரகம் வென்றது.

- Advertisement -

வரலாற்று வெற்றி:

அதன் வாயிலாக வங்கதேசத்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு தொடரை வென்று அமீரகம் சாதனை படைத்தது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக ஒரு தொடரை வென்று அமீரகம் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இது போக முழு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக இரண்டாவது முறையாக அமீரகம் ஒரு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: அந்த 2 பேர் கிட்ட பந்தை குடுத்தா மேட்ச் எங்க கன்ட்ரோல்க்கு வந்துடும்.. வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேட்டி

மறுபுறம் வங்கதேச அணி கத்துக்குட்டியாக கருதப்படும் அமீரகத்துக்கு எதிராக முதல் முறையாக அவமானத் தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு சோரிபுல் இஸ்லாம் 1, தன்சிம் ஹசன் 1, ரிஷத் ஹொசைன் 1 விக்கெட் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் வங்கதேச ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சோகமாக காணப்படுகின்றனர்.

Advertisement