இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளசிஸ் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
டெல்லி அணியை வீழ்த்தியதற்கு இதுதான் காரணம் : ஹார்டிக் பாண்டியா
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 73 ரன்களையும், திலக் வர்மா 27 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், சமீரா, முஸ்தபிசுர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்களையும், விப்ராஜ் நிகம் 20 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறியதாவது : போட்டியின் எந்த நேரத்திலும் கன்ட்ரோல் கிடைக்கும் வேண்டுமெனில் நான் பந்தை ஜஸ்ப்ரீத் பும்ராவிடமும், மிட்சல் சான்ட்னரிடமும் கொடுப்பேன். அவர்கள் இருவருரிடம் எப்போது பந்தை கொடுத்தாலும் அந்த ஓவரை மிகச் சிறப்பாக வீசி போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.
அப்படி போட்டியில் கன்ட்ரோலை அவர்கள் கொண்டு வந்து விடுவதால் எனக்கு கேப்டனாக வெற்றி பெறும் வேலை எளிதாகி விடுகிறது. இந்த போட்டியில் நாங்கள் 160 ரன்கள் வரை எடுத்தாலே மகிழ்ச்சியாக இருந்திருப்போம். ஆனால் நமன் திர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி மேலும் அதிக ரன்களை சேர்த்து அசத்தினர்.
இதையும் படிங்க : 121க்கு ஆல் அவுட்.. டெல்லி வரலாறு காணாத சாதனை தோல்வி.. ஊதித்தள்ளி பிளே ஆஃப் சென்ற மும்பை
அதிலும் குறிப்பாக நமன் திர் மிகச் சிறப்பாக விளையாடி கடினமான ஆடுகளத்திலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப் மற்றும் எங்களது பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடுமே இந்த வெற்றிக்கு காரணம் என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



