166 ரன்ஸ்.. வலுவான ஆப்கானிஸ்தானை தோற்கடித்த யூஏஈ.. சாதனை வெற்றியுடன் பதிலடி

UAE vs AFG
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுபபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்த அந்த அணி எதிர்பார்க்கப்பட்டது போலவே போட்டியில் அமீரகத்தை எளிதாக வீழ்த்தியது.

அதைத்தொடர்ந்து இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி டிசம்பர் 31ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு நாடுகள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் கடுமையாக போராடி 166/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் கேப்டன் முகமது வாசிம் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (32) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பதிலடி வெற்றி:
அவருடன் மற்றொரு துவக்க வீரர் ஆரியன் லக்ரா 3 பவுண்டரி 4 சிக்சருடன் 63* (47) ரன்கள் குவித்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அசமத்துல்லா மற்றும் கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 167 என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் ஹசரத்துல்லா சாஸாய் 36 (27) ரஹ்மனுதுல்லா குர்பாஸை 21 (17) ரன்களில் அவுட்டாக்கிய அலி நசீர் அடுத்ததாக வந்த கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரானை 4 ரன்களில் காலி செய்தார்.

அந்த நிலைமையில் வந்த நஜிபுல்லா ஜாட்ரான் 12 ரன்களில் அவுட்டானதால் தடுமாறிய ஆப்கானிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் நட்சத்திர அனுபவ வீரர் முகமது நபி அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். ஆனால் ரசூலி 0, ஓமர்சாய் 1, கைஸ் அஹ்மத் 13, நூர் அஹ்மத் 8, நவீன்-உல்-ஹக் 0 என எதிர்ப்புறம் வந்த வீரர்களை அடுத்தடுத்த ஓவர்களில் சீரான இடைவெளிகளில் அவுட்டாக்கிய ஜவானுல்லா பெரிய சவாலை கொடுத்தார்.

- Advertisement -

அதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது 9 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது ஆகிப் ராஜா வீசிய கடைசி ஓவரில் சிக்சர் அடித்து போராடிய முகமது நபி 5வது பந்தில் 47 (27) ரன்களில் அவுட்டானதால் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் 19.5 ஓவரில் ஆப்கானிஸ்தானை 155 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த ஐக்கிய அரபு நாடுகள் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இப்படியே போன அழிஞ்சுடும்.. ஐசிசி, இந்தியா தான் காப்பாத்த முடிவெடுக்கனும்.. ஸ்டீவ் வாக் கோரிக்கை

அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டின் வரலாற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 10 போட்டிகளில் வெறும் 2வது முறையாக சாதனை வெற்றியை பதிவு செய்து அசத்திய அமீரகம் அணி 1 – 1* (3) என்ற கணக்கில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் நமது ஜவானுல்லா மற்றும் அலி நசீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய நிலையில் கடைசி போட்டி ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement