இப்படியே போனா அது அழிஞ்சுடும்.. ஐசிசி, இந்தியா தான் காப்பாத்த முடிவெடுக்கனும்.. ஸ்டீவ் வாக் கோரிக்கை

Steve Waugh
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதன் வாயிலாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

இந்த தொடரை முடித்துக் கொண்டு ஜனவரி மாதம் இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆனால் அதே சமயத்தில் ஐபிஎல் போல சிஎஸ்ஏ எனப்படும் டி20 தொடரை தென்னாபிரிக்க வாரியம் நடத்துகிறது. அதில் டேவிட் மில்லர் முதல் ரபாடா வரை அனைத்து தென்னாப்பிரிக்க நட்சத்திர முதன்மை வீரர்களும் பல்வேறு அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

- Advertisement -

ஸ்டீவ் வாக் கோரிக்கை:
அதன் காரணமாக அந்த நியூசிலாந்து தொடரில் இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத 7 புதுமுக வீரர்களை கொண்ட 3வது தர அணி விளையாடுமென்று தென்னாப்பிரிக்க வாரியம் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பணம் தான் முக்கியம் என்று முடிவெடுத்துள்ள தென்னாப்பிரிக்கா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத நெய்ல் பிராண்ட் எனும் 26 வயது வீரர் அந்த நியூசிலாந்து தொடரில் தங்களின் கேப்டனாக செயல்படுவார் என கூறியுள்ளது.

இந்நிலையில் பணத்துக்காக கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்கும் தென்னாப்பிரிக்க வாரியத்தின் இந்த முடிவை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் இந்த நிகழ்வுகள் வருங்காலத்தில் நடக்காமல் ஐசிசியுடன் சேர்ந்து இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற சக்தி மிகுந்த வாரியங்கள் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. தென்னாப்பிரிக்கா வாரியம் இப்படி வருங்காலத்தில் தங்களுடைய வீரர்களை வீட்டிலேயே வைத்துக் கொண்டால் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். ஒருவேளை நான் தற்போது நியூசிலாந்தில் இருந்தால் இந்த தொடரில் விளையாடவே மாட்டேன். முதலில் இத்தொடரை அவர்கள் எதற்காக விளையாடுகிறார்கள் என்பதை எனக்கு தெரியவில்லை”

இதையும் படிங்க: அந்த 3 பேர் எனக்கு ரொம்ப சவாலை கொடுத்தாங்க.. 2 இந்தியர்கள் உட்பட 3 ஜாம்பவான்களை பாராட்டிய நேதன் லயன்

“நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு மரியாதை குறையும் போது நீங்கள் ஏன் அதில் விளையாட வேண்டும். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவுக்கான தருணமாக இருக்கிறதில்லவா? கண்டிப்பாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முக்கிய வாரியங்கள் ஐசிசியுடன் சேர்ந்து கிரிக்கெட்டின் தூய்மையான வடிவத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும். இல்லையேல் டான் பிராட்மேன், கிரேஸ், சொபர்ஸ் போன்றவர்களின் மரபு நியாயமற்றதாகி விடும்” என்று கூறினார்.

Advertisement