ஐ.பி.எல் 2022 : 2 புதிய அணிகள் அறிமுகம். எந்த நகரை சார்ந்தது தெரியுமா ? – யார் வாங்கியது தெரியுமா ?

IPL-bcci
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த வேளையில் அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அது தவிர கொல்கத்தா அணி இரண்டு முறையும், சன்ரைசர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளனர்.

IPL
IPL Cup

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சிஎஸ்கே அணி நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மேலும் புதிய புதிய இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளதாக ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-யும் தெரிவித்திருந்தது.

- Advertisement -

மேலும் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களின் ஏலமும் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த புதிய 2 அணிகளுக்கான ஏலம் துபாயில் நடைபெற்றது. அதில் இந்த இரண்டு புதிய அணிகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள் யார் ? என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி புது இரண்டு அணிகளாக குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரை தலைமையாக கொண்ட ஒரு அணியும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகரத்தை மையமாகக் கொண்டு ஒரு அணி என இரண்டு அணிகள் உதயமாகி உள்ளன.

- Advertisement -

இதையும் படிங்க : மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கும் முன்னணி ஆல்ரவுண்டர் – இனிமே அந்த டீமை ஒன்னும் பண்ணமுடியாது

CVC கேப்பிட்டல் எனும் நிறுவனம் அகமதாபாத் அணியை 5200 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அதேபோன்று ஆர்.பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் லக்னோ அணியை 7 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரு அணிகளும் மற்ற 8 அணிகளுடன் இணைந்து அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement