மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கும் முன்னணி ஆல்ரவுண்டர் – இனிமே அந்த டீமை ஒன்னும் பண்ணமுடியாது

Stokes
- Advertisement -

உலகம் முழுவதும் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவியதன் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது. மக்கள் அனைவரும் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். அதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இறுதியிலும் 2020ஆம் ஆண்டின் துவக்கத்திலும் உலகெங்கிலும் எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக அதன் தாக்கம் குறைய ஆரம்பிக்க கிரிக்கெட் வீரர்கள் “பயோபபுள்” எனும் மருத்துவப் பாதுகாப்பு வளையத்திற்குள் மீண்டும் விளையாட ஆரம்பித்தனர்.

INDvsENG

- Advertisement -

பின்னர் தற்போது மெல்ல மெல்ல கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வீரர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் வெளியே எங்கும் செல்லக்கூடாது, யாருடனும் நேரடி தொடர்பில் இருக்கக்கூடாது, குறிப்பிட்ட வளையத்தில் இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விளையாடும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வீரர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகினர்.

அந்த வகையில் தொடர்ச்சியாக பயோ பபுளில் விளையாடியதன் காரணமாக இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மன அழுத்தத்தில் இருப்பதால் தனக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு தேவை என்று இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறினார். மேலும் அதனை தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடாமல் இருந்தார்.

stokes 1

இந்நிலையில் தான் போதிய ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும், தற்போது கிரிக்கெட்டிற்கு திரும்ப தயாராக இருப்பதாகவும் மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைய தயார் என அதிரடியாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மன அழுத்தம் மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நான் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வில் இருந்தேன். தற்போது நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகிவிட்டேன். நிச்சயம் ஆஷஸ் தொடரில் பங்கேற்க நான் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியை தோக்கடிச்சது நான் இல்ல. இவங்கதான் வெற்றிக்கு காரணம் – ஷாஹீன் அப்ரிடி வெளிப்படை

இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் : ஸ்டோக்ஸ் தற்போது சிறப்பான மனநிலையுடன் உள்ளார். நான் அவரிடம் பேசினேன் நிச்சயம் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் அதன் பிறகு மீண்டும் இந்த ஆண்டு இறுதியில் நிச்சயம் அவர் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியில் பங்கேற்க இடம் உண்டு என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement