இந்திய அணியை தோக்கடிச்சது நான் இல்ல. இவங்கதான் வெற்றிக்கு காரணம் – ஷாஹீன் அப்ரிடி வெளிப்படை

Shaheen-afridi-1
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை டி20 லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 151 ரன்களை குவிக்க இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றிக்காக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Rahul-1

- Advertisement -

இந்நிலையில் இந்த லீக் போட்டியில் இந்திய அணி தோல்வியடைய முக்கிய காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி திகழ்ந்தார். நான்கு ஓவர்கள் வீசிய அவர் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக துவக்க ஓவர்களிலேயே அதாவது முதல் ஓவரில் ரோகித் சர்மாவையும், மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ராகுலையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வைத்து பாகிஸ்தான் அணிக்கு திருப்புமுனையை தந்தார்.

பிறகு இறுதியில் இந்திய அணிக்காக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த விராட் கோலியின் விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்படி இந்திய அணியின் முக்கிய மூன்று வீரர்களையும் வீழ்த்திய இவருக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றி குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : இன்று என்னுடைய செயல்பாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

shaheen afridi

என்னுடைய திட்டம் எல்லாம் பாலை ஸ்விங் செய்ய முயற்சிக்க வேண்டும் என்பது மட்டும்தான். துவக்க ஓவர்களில் ஸ்விங் செய்து வீசும்போது பேட்ஸ்மேன்களுக்கு அது கடினமாக அமையும். அதன்படி எங்கள் அணி விக்கெட்டை எதிர்பார்த்த போது நான் பிரேக் த்ரூ கொடுத்தது சிறப்பான ஒரு விடயம். பயிற்சியின்போது அதிகளவு பந்தை ஸ்விங் செய்ய பயிற்சி எடுத்தேன். ஸ்விங் பந்தில் பேட்டிங் செய்வது கடினம் என்பது எனக்குத் தெரியும்.

- Advertisement -

இதையும் படிங்க : அவர் ஒரு சாம்பியன் பிளேயர். அவரை திட்டாதீங்க ப்ளீஸ் – இந்திய வீரருக்காக குரல் கொடுத்த சேவாக்

என்னை பொருத்தவரை பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இருவருமே சேஸிங் செய்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளனர். இந்த உலக கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. இந்த வெற்றியை நாங்கள் அப்படியே கொண்டுசென்று இறுதிப் போட்டி வரை செல்வோம் எனவும் ஷாகின் அஃப்ரிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement