
கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வரலாற்று டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் எதிர்கொண்டுள்ளது ஆப்கனிஸ்தான் அணி. இன்று(ஜூன் 14) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணியின் ஷிகர் தவான் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த போட்டியின் உணவு இடைவேளைக்கு முன்பு சதமடித்து மற்றும் ஒரு சாதனை பட்டியலிலும் தவான் இடம்பிடித்துள்ளார்.
இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தற்போதைய நிலவரப்படி 48 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் 25.5 ஒவேரில் 87 பந்துகளில் தனது சததத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுளளர்.
மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்த பட்டியலில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 6 வது இடத்தை பிடித்துள்ளார் தவான். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் விக்டர் ட்றும்பர் (1902) )இருக்கிறார் .மேலும், இந்த பட்டியலில் எந்தெந்த வீரர் எந்த அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்துள்ளனர் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.விக்டர் ட்றும்பர் (ஆஸ்திரேலிய )- 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக
2. சார்லி மகார்ட்னி (ஆஸ்திரேலியா) – 1921 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு அணிக்கு எதிராக
3. டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) – 1930ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு அணிக்கு எதிராக
4. மஜீத் கான் (பாகிஸ்தான்) – 1976 ஆம் ஆண்டு நியூலாந்து அணிக்கு எதிராக
5. டேவிட் வார்னேர் (ஆஸ்திரேலியா) – 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக
6. ஷிகர் தவான் ( இந்தியா) – 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக