பிளான் போட்டதே அவர் தான்.. தோனிக்காக சிஎஸ்கே ரசிகர்களை ஃப்ராங் செய்த ஜடேஜா.. தேஷ்பாண்டே பேட்டி

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 5வது போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஏப்ரல் எட்டாம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 138 ரன்கள் மட்டுமே இலக்காக கொடுத்தது. அதை 17.4 ஓவரிலேயே சேசிங் செய்த சென்னை எளிதாக வெற்றி கண்டது.

பேட்டிங்கில் கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 67*, சிவம் துபே 28, டேரில் மிட்சேல் 25 ரன்கள் எடுத்தனர். அதே போல பந்து வீச்சில் சென்னைக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, துசார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் கொல்கத்தாவுக்கு வைபவ் அரோரா 2 விக்கெட்டுகள் சாப்பிட்டார்.

- Advertisement -

தோனியின் ஃப்ராங்:
இதனால் 2 தொடர்ச்சியான தோல்விகளை தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் நிறுத்திய சென்னை 3வது வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய கொல்கத்தா 4 வெற்றிகளுக்கு பின் முதல் தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக இந்த வருடம் விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வரும் ஜாம்பவான் எம்எஸ் தோனி சேப்பாக்கத்தில் நடந்த முதல் 2 போட்டிகளில் பேட்டிங் செய்யவில்லை.

அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இப்போட்டியில் கடைசி நேரத்தில் சிவம் துபே அவுட்டானதும் தோனி களமிறங்குவார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அப்போது ரசிகர்களை வெறுப்பேற்றுவதற்காக ரவீந்திர ஜடேஜா வேண்டுமென்றே பேட்டிங் செய்வதற்காக பேட்டை கையிலெடுத்துக் கொண்டு வந்தார். இருப்பினும் சில அடிகள் சென்றதும் மீண்டும் சிரித்துக்கொண்டே பெவிலியனுக்குள் சென்ற ஜடேஜா ரசிகர்களுக்கு விளையாட்டு காட்டினார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக வந்த தோனிக்கு 125 டெசிபல் சத்தத்தில் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் விசிலடித்து வெறித்தனமான வரவேற்பு கொடுத்தனர். அந்த சத்தத்தை தாங்க முடியாமல் பவுண்டரி எல்லையில் அருகே நின்று கொண்டிருந்த ரசல் காதை பொத்திக்கொண்டது வேறு கதை. இந்நிலையில் அந்த நேரத்தில் முதலில் நீ பேட்டிங் செல்வது போல் சென்று சிஎஸ்கே ரசிகர்களிடம் நடி என்று தோனி தான் ஜடேஜாவிடம் சொன்னதாக அங்கிருந்த துசார் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 3-ஆம் இடத்தில் ரஹானே களமிறங்காதது ஏன்? – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம்

இது பற்றி சிஎஸ்கே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் பேட்டிங் செய்வதற்காக செல்கிறேன். ஆனால் முதலில் நீ செல்வது போல் நடி என்று ஜடேஜா பாயிடம் தோனி பாய் சொன்னர்” என்று கூறினார். அதற்கு ஜடேஜா பதிலளித்தது பின்வருமாறு. “மஹி பாய் பேட்டிங் செய்வதை பார்ப்பது எப்போதும் ரசிகர்கள் தாங்கள் கொடுத்த

Advertisement